UAE Tamil Web

துபாய் விமான நிலையத்தில் இந்த முகக் கவசங்களை பயன்படுத்தக்கூடாது – புதிய கட்டுப்பாடு..!

Pharmaceutical-workers-wear-face-masks-to-serve-customers-in-a-pharmacy-in-Barcelona--Spain--on-Sunday--

துபாய் வழியாகப் பயணிப்பவர்கள் பந்தனாஸ் (bandanas), ஸ்கார்வ்ஸ் (scarves) அல்லது ஷால்-களை முகக்கவசமாக உபயோகித்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிளாஸ்டிக் முகக்கவசங்களை உபயோக்கிக்க வேண்டாம் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பயணிகள் முழு பாதுகாப்பைப் பெற துணி அல்லது சர்ஜிகல் முகக்கவசத்தை உபயோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் தாங்கள் செல்லும் நாடு விதித்திருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் முகக்கவசங்களைப் பயன்படுத்தவேண்டும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூர் விதிமுறைகளின் அடிப்படையில், துபாயில் இருந்து ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணிப்பவர்கள் மருத்துவ முகக் கவசங்களைப் பயன்படுத்தவேண்டும் என எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

பயணிகள் துபாய் விமான நிலையத்தில் இருக்கும் நேரம் அனைத்திலும், தங்களது பயணம் துவங்குவது, பயணம் முடிவடைந்து விமானத்தை விட்டு வெளியேறும் வரையில் துணி அல்லது மருத்துவ முகக் கவசங்களைப் பயன்படுத்துதல் வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

யாரெல்லாம் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்கலாம்?

6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறிப்பிட்ட மருத்துவ குறைபாடுகளினால் அவதிப்படுவோர் முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்குப் பெறலாம்.

உங்களால் பயணம் முழுவதும் முகக்கவசம் அணிய முடியாதென்றால் நீங்கள் மருத்துவ தகவல் விண்ணப்பத்தை (MEDIF) பூர்த்தி செய்திருக்க வேண்டும் என எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

பின்வருவனவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முக்கக்கவசம் அணிய வேண்டாம்.

  • பார்கின்சன் நோய்
  • அல்சைமர் நோய்
  • டிமேன்டியா
  • ஹைட்ரோகெபாலஸ்
  • டவுன் சிண்ட்ரோம்
  • தாமத வளர்ச்சி
  • ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் நிலை

ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர் அல்லது பின்வரும் சுவாச கோளாறுகளை உடையவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  • நாள்பட்ட நுரையீரல் தடுப்பு நோய் (COPD)
  • இதய செயலிழப்பு
  • சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்
  • ஆஸ்துமா
Pharmaceutical-workers-wear-face-masks-to-serve-customers-in-a-pharmacy-in-Barcelona--Spain--on-Sunday--
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap