UAE Tamil Web

துபாய்: கோவிட்-19 தொற்றால் கடும் சவால்கள் ஏற்பட்ட போதும் தங்கு தடையின்றி கரண்ட், தண்ணீர் வழங்கிய Dewa..

DEWA

கோவிட்-19 தொற்று பேரிடர் காரணமாக கடுமையான சவால்கள் ஏற்பட்ட போதிலும் துபாயில் மின்சார விநியோகம் தடையின்றி சீராக வழங்கப்பட்டுள்ளது.

- Advertisment -

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் தொற்று காரணமாக கடுமையான சவால்கள் ஏற்பட்ட போதும், துபாய் முழுவதும் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் நிலையாக இருந்தது. கடந்த சில மாதங்களாக சிறிய தடை கூட இன்றி (பூஜ்ஜிய குறுக்கீடுகள்) மக்களுக்கு மேற்கண்ட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன என கூறியுள்ளனர்.

வணிக தொடர் மேலாண்மைக்காக ஐஎஸ்ஓ சான்றிதழைப் பெற்ற முதல் பயன்பாட்டு சேவை வழங்குநராக மத்திய கிழக்கில் துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa) திகழ்கிறது. கோவிட்-19 உட்பட எந்தவொரு அவசர காலத்திலும் சேவைகளை தடையில்லாமல் வழங்க தெளிவான, அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை Dewa கொண்டுள்ளது. முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சோலார் பார்க் உட்பட Dewa-வின் அனைத்து திட்டங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுயமின் உற்பத்தி மாதிரியைப் பயன்படுத்தும் இந்த பூங்கா உலகின் மிகப்பெரிய ஒற்றை தள சோலார் பூங்காவாகும்.

இந்த சோலார் பூங்காவில் தற்போதைய திட்டங்கள் 1,013 மெகாவாட் திறன் கொண்டவை. இதுவரை அறிவிக்கப்பட்ட 5 கட்டங்களின் மொத்த கொள்ளளவு 2,863 மெகாவாட்டை எட்டும்.மேலும் 2030-க்குள் 5,000 மெகாவாட்டை எட்டுவதை இலக்காக கொண்டுள்ளது. Dewa-வின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சயீத் முகமது அல் டேயர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி வாகனங்கள், எரிசக்தி சேமிப்பு, பிளாக்செயின்(blockchain) மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்((IoT) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் மற்றும் இணைக்கப்பட்ட அமைப்புகள் மூலம், அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கவும், அனைத்து வசதிகளையும் சேவைகளையும் நிர்வகிக்கவும் நாங்கள் செயல்படுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Dewa தற்போது ஒரு நாளைக்கு 11,700 மெகாவாட் மற்றும் 470 மில்லியன் கேலன்ஸ் தண்ணீரை உற்பத்தி செய்கிறது. 2006 முதல் 2019 வரை 31.4% செயல்திறனை அதிகரித்துள்ளது. கொரோனா நேரத்தில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தி, வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் கூட்டாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தருகிறது Dewa.

தொற்றுநோய்களின் சவால்களை சமாளிப்பதில் Dewa-வின் பெருநிறுவனத்தின்சுறுசுறுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது, கூடுதலாக திறமையான தலைமை மற்றும் கூட்டாண்மை, வலுவான நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப தலைமை மற்றும் அதன் மேம்பட்ட டிஜிட்டல் அமைப்பு ஆகியவையும் Dewa-வின் சேவைகளுக்கு வலு சேர்கின்றன.