UAE Tamil Web

துபாய் வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.! டிசம்பர் 1 முதல் உங்களது இந்த செலவில் கணிசமாக சேமிக்கலாம்..

dewa

துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dewa) வரும் டிசம்பர் 1 முதல், மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.

- Advertisment -

தற்போது மின்சாரத்திற்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு(kilowatt hour), 6.5 ஃபில்ஸாக உள்ளது. புதிய அறிவிப்பை அடுத்து இனி அது 5 ஃபில்ஸாக இருக்கும். தண்ணீருக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் தற்போது ஒரு இம்பெரியல் கேலனுக்கு (imperial gallon) 0.6 ஃபில்ஸாக இருக்கிறது.

Dewa-வின் கட்டண குறைப்பால் டிசம்பர் 1 முதல் தண்ணீருக்கான எரிபொருள் கூடுதல் கட்டணம் ஒரு இம்பீரியல் கேலனுக்கு (imperial gallon) 0.4 ஃபில்ஸாக இருக்கும். துபாயின் எரிசக்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான ஆற்றலின் பங்கை அதிகரிக்க, அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் கூடுதல் கட்டணம் குறைப்பு 2020 டிசம்பர் 1 முதல் மின்சாரம் மற்றும் நீர் பில்களில் பிரதிபலிக்கும். துபாயின் எரிசக்தி கலவையில் தூய்மையான ஆற்றல் திறனின் பங்கு சுமார் 9% உயர்ந்ததால் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளது. சோலார் ஆற்றல் உற்பத்தி அதிகரித்ததன் பலனாக, எரிபொருள் பயன்பாட்டில் பெறப்பட்ட சேமிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக இந்த அறிவிப்பை Dewa வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.