UAE Tamil Web

ஐடியாஸ் அமெரிக்கா விருதுகள் 2020: 16 விருதுகளை அள்ளிய துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa)

DEWA

ஐடியாஸ் அமெரிக்கா விருதுகள் 2020-ல்(Ideas America Awards 2020), துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa) மொத்தம்16 விருதுகளை வென்றுள்ளது. ஐடியாஸ் அமெரிக்கா என்பது சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகளுக்கான மிகப்பெரிய உலகளாவிய தளமாகும்.

- Advertisment -

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக Dewa ஒட்டுமொத்த ஐடியா ஆஃப் தி இயர் விருதுகளை வென்றுள்ளது அமீரக வாசிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. Dewa, நிறுவன விருது(Organisational award) ஒன்றையும் மற்றும் நிர்வாகத் தலைவர், திருப்புமுனை கண்டுபிடிப்பு, சிறந்த செயல்முறை திட்ட நிர்வாகி, சாம்பியன் ஆஃப் தி இயர், சேஃப்டி ஆஃப் தி இயர் மற்றும் போலீசிங் / செக்யூரிட்டி ஐடியா ஆஃப் தி இயர் உள்ளிட்ட 6 தங்க விருதுகளையும் வென்றுள்ளது.

அட்வகேட் ஆஃப் தி இயர், சாம்பியன் ஆஃப் தி இயர், டீம் ஐடியா ஆஃப் தி இயர் உள்ளிட்ட 3 வெள்ளி விருதுகளையும், ஆண்டின் சிறந்த ஐடியாவுக்கான 2 வெண்கல விருதுகளையும், 2 குடோஸ்(KUDOS) விருதுகளையும் மற்றும் 2 கவுரவ விருதுகள் என மொத்தம் 16 விருதுகளை Dewa வென்றுள்ளது.

Dewa-வின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சயீத் முகமது அல் டேயர் கூறுகையில், ‘இந்த புதிய உலகளாவிய சாதனையை, பெருமதிப்பிற்குரிய அமீரக துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமுக்கு அர்ப்பணிக்கிறோம். அமீரகம் நூற்றாண்டை தொடும் 2071-ற்குள், உலகின் சிறந்த நாடாக அமீரகத்தை மாற்ற தேவையான எங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறோம்”என்றார்.

மேலும் பேசிய அவர், புதுமையான தொழில்நுட்பங்களால் துபாயை மற்ற நகரங்களை விட 10 ஆண்டுகள் முன் இருக்க செய்ய, ஷேக் முகமது தொடங்கிய துபாய் 10 எக்ஸ் முயற்சிக்கு ஏற்ப, Dewa உலகளவில் முன்னணி மற்றும் புதுமையான நிறுவனமாக மாறுவதற்கான ஊக்கமளிக்கும் சூழலை ஊழியர்களுக்கு வழங்க முயற்சிக்கிறது என கூறினார்.

Dewa-வின் புதுமை திட்டங்கள் துபாயில் புதுமை மற்றும் படைப்பாற்றலை ஆதரிக்கும் பல வெற்றிகளையும் உலகளாவிய சாதனைகளையும், குறிப்பாக நான்காவது தொழில்துறை புரட்சி பயன்பாடுகளில் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.