UAE Tamil Web

துபாய்: வானை ஜொலிக்க வைக்க போகும் தீபாவளி கொண்டாட்டங்கள்.! எங்கெல்லாம் வானவேடிக்கை திருவிழாவை பார்க்கலாம்.?

diwali

வார இறுதியில் வரும் கோலாகலமான தீபாவளி பண்டிகையை கொண்டாட அமீரக வாழ் இந்தியர்கள் குதூகலமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisment -

இருளை நீக்கி வெளிச்சத்தை ஏற்படுத்தும் இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியை, வியக்க வைக்கும் வானவேடிக்கைகள், அற்புதமான நீரூற்று நடனங்கள் மற்றும் இசை கொண்டாட்டங்கள் உள்ளிட்டவற்றால் விளக்கொளியால் ஏற்கனவே மின்னும் துபாய் நகரை மேலும் பிரகாசமாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

துபாய் திருவிழாக்கள் மற்றும் ரீட்டெய்ல் ஸ்தாபனம்(Dubai Festivals and Retail Establishment) ஏற்பாடு செய்துள்ள இந்த ஆண்டு தீபாவளி விழாக்களில், குளோபல் வில்லேஜ் மற்றும் தி பாயிண்ட்டில் வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்வுகளும் அடங்கும். மேலும் இரு இடங்களிலும் ஒளி, ஒலி மற்றும் வண்ண நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் அனுபவிக்கலாம்.

தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 13 அன்று பாம் ஜுமேராவில் உள்ள சமீபத்தில் உலக சாதனை படைத்த உலகிலேயே மிகப்பெரிய நீரூற்றான, பாம் நீரூற்று வான வேடிக்கையால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செயல்திறனைக் கொண்டிருக்கும்.

இரவு 9 மணிக்கு, தி பாம் நீரூற்று செயல்படுவதற்கு முன் அட்லாண்டிஸ், தி பாம் ஹோட்டல் மற்றும் தி பாயிண்ட் ஆகியவற்றை வண்ணமயமான வானவேடிக்கை ஒளிரச் செய்யும். இந்த சிறப்பு தீபாவளி நிகழ்ச்சியில் பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் பாலிவுட் பாடல் மல்ஹாரி பின்னணியில் இசைக்கப்பட உள்ளது.

பரவசத்தில் ஆழ்த்தும் பாம் நீரூற்று..

14,000 சதுர அடி கடல் நீரில் பரவியிருக்கும், “பாம் நீரூற்றின்” இரண்டு மாபெரும் மிதக்கும் தளங்கள் 105 மீட்டர் உயரம் வரை நீரை காற்றில் செலுத்தும் வாட்டர் ஜெட் சூப்பர் ஷூட்டரை கொண்டுள்ளது. மேலும் பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தி அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க 3,000-க்கும் மேற்பட்ட எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் தி பாயிண்ட்டிற்கு வரும் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கிடைக்கும் சிறப்பு தீபாவளி மெனுக்களை 25% தள்ளுபடியில் பெறலாம்.

diwali1

கண்ணை பறிக்கும் குளோபல் வில்லேஜ்..

குளோபல் வில்லேஜிலும் தீபாவளியானது நேரடி நிகழ்ச்சிகள், உணவு விற்பனையாளர்கள், நூற்றுக்கணக்கான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மற்றும் வானவேடிக்கைகளுடன் களை கட்ட உள்ளது. மேலும் இங்கு விரிவாக்கப்பட்ட தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளியன்றும்இரவு 9 மணிக்கு இசையுடன் கூடிய வானவேடிக்கை காட்சிப்படுத்தப்படும்.

குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன்சோட்டா பீம் கதாபாத்திரங்கள் மற்றும் தீபாவளி தீமுடன் கூடிய ஃபிளாஷ் மாப்கள் மற்றும் பல முன்னோடி நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் அனுபவிக்க முடியும். கிராண்ட் BBQ, பஞ்சாபி வில்லேஜ் , இந்தியன் சாட் பஜார், குல்பிலியஸ் மற்றும் எவ்ரிதிங்க் பராத்தா மற்றும் பல தெரு உணவு விற்பனையாளர்கள் ஏராளமான சுவைகள் மற்றும் பாரம்பரிய தீபாவளி சுவையான பல இந்திய உணவு விருப்பங்களை குளோபல் வில்லேஜில் வழங்குகின்றனர்.

diwali2

துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி..

நவீன வணிக மற்றும் பொழுதுபோக்கு பகுதியான துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி, வழக்கம் போல ரெக்கார்ட் பிரேக்கிங் ஒளி, லேசர், தீ மற்றும் நீரூற்றை பயன்படுத்தி IMAGINE ஒரு தனித்துவமான உணர்ச்சிமிக்க அனுபவத்தை வழங்க தயாராக உள்ளது. நவம்பர் 21 வரை தினமும் நடைபெறும், ஃபெஸ்டிவல் பேவில் உள்ள IMAGINE நிகழ்ச்சி ஒரு குழந்தை யானையின் கதையையும், ஏ.ஆர்.ரஹ்மானின் உலகளாவிய இந்தி பாப் ஹிட் ஜெய் ஹோவின் விளக்கத்தையும் கண்முன் நிறுத்த உள்ளது.

diwali3

IMAGINE நிகழ்ச்சி குறிப்பாக இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய நிகழ்ச்சிகளை காண்பிக்கும். ஹதியின் கார்டன்(Hathi’s Garden) மற்றும் ஜெய் ஹோ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தீபாவளி வாழ்த்துக்களின் சிறப்புத் புரொஜெக்க்ஷன்கள் தினமும் மாலை 6.30 மணிக்கு தொடங்கும். மேலும் ஃபெஸ்டிவல் பேவில் பார்வையாளர்கள் பலவிதமான சுவையான உணவு விருப்பங்களை ருசிக்க முடியும்.