fbpx
UAE Tamil Web

டிசம்பர் 17-ல் துவங்கும் துபாய் ஷாப்பிங் திருவிழா(DSF 2020).. 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை ரொக்க பரிசுகளை வெல்ல தயாராகுங்கள்.!

DSF

அமீரகத்தில் நாளை மறுநாள் கோலாகலமாக துவங்க உள்ளது மிகவும் பிரபல வருடாந்திர ரீடெய்ல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியான துபாய் ஷாப்பிங் திருவிழா(Dubai Shopping Festival).

இந்த ஆண்டு DSF-ன் 26-ஆம் பதிப்பு நாளை மறுநாள் டிசம்பர் 17 துவங்கி 2021 ஜனவரி 30 வரை 6 வாரங்களுக்கு மேல் நடைபெறுகிறது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் போது வாடிக்கையாளர்கள் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக துபாய் ஷாப்பிங் மால்ஸ் குரூப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

DSF திருவிழாவில் பங்கேற்கும் மால்களில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 11, 18, 25 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் வாராந்திர ரேஃபிள் டிராவின் போது ரொக்கப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு கிடைக்கும்.

DSF-ன் போது 150 திர்ஹம்ஸ் , 200 மற்றும் 300 திர்ஹம்ஸ் செலவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் ஒவ்வொரு செலவினங்களுடனும் முறையே சிவப்பு, நீலம் அல்லது மஞ்சள் வவுச்சர்களை பெறலாம். இதில் சிவப்பு வவுச்சர்களைக் கொண்ட வாடிக்கையாளர்கள் மொத்தம் 250,000 திர்ஹம்ஸ் வெல்ல முடியும், அதே நேரத்தில் நீல நிற வவுச்சர்கள் வைத்திருப்பவர்கள் மொத்தம் 350,000 திர்ஹம்ஸ் மற்றும் மஞ்சள் வவுச்சர்கள் வைத்திருப்பவர்கள் 400,000 திர்ஹம்ஸ் என ஒட்டு மொத்தமாக 1 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்க பரிசு வாடிக்கையாளர்களுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 24 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் அடங்குவர். அவர்கள் ரேஃபிள் டிராவிலிருந்து, ஸ்பின் வீலுக்கு தேர்வு செய்யப்பட்டு 2,000 திர்ஹம்ஸ் முதல் 20,000 திர்ஹம்ஸ் வரை பரிசுகளை வெல்ல வாய்ப்பு உள்ளது. இது பற்றி பேசிய துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமத்தின் தலைவர் மஜித், சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமீரகத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் அற்புதமான மூன்று வகை ரேஃபிள் விளம்பரத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறோம்.

இந்த ஆண்டு அதிக பங்கேற்பாளர்களையும் அதிக வெற்றியாளர்களையும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், செலவினங்களை பொருட்படுத்தாமல், 3 வகை விளம்பரங்களும் ஒவ்வொரு வடிக்கையாளரும் வெற்றியாளராக இருப்பதற்கான வாய்ப்பை வழங்கும். DSF-ன் போது அதில் பங்கேற்றுள்ள மால்களில் உணவருந்தினாலும் அல்லது பொதுப் பொருட்களுக்காக ஷாப்பிங் செய்தாலும், 150 திர்ஹம்ஸ் அல்லது அதற்கும் குறைவான செலவில் கூட வாடிக்கையாளர்கள் டிராவில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.