UAE Tamil Web

துபாய்: தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுனர்: சாலையில் தடம்புரண்ட பேருந்து – 10 பேர் காயம்..!

Bus Accident

துபாய்: உம் சகேம் சாலையில் (Umm Suqeim Road) இன்று அதிகாலை தூக்க கலக்கத்தில் ஓட்டுனர் இயக்கிய பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.

- Advertisment -

சையத் பின் ஹம்தான் அல் நஹ்யான் ரவுண்டானாவிற்கு அருகில் ஷேக் சயீத் சாலைக்குச் செல்லும் வழியில் இன்று காலை 6 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

கண்ணயர்ந்த டிரைவரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலையின் வலப்பக்கம் உள்ள உலோகத்தடுப்பில் சென்று பேருந்து மோதியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக பேருந்து இடப்பக்கம் தடம் புரண்டிருக்கிறது.

“ஓட்டுனர் சரிவர தூங்காததன் மற்றும் அசதியின் காரணமாக பல பேருடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்க இருந்தார். இந்தப் பேருந்தினுள் மொத்தம் 32 பயணிகள் இருந்தனர். விபத்து ஏற்பட்ட உடனேயே காவல்துறை ரோந்துப் படையினர் மற்றும் மருத்துவ உதவிக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தது. காயமடைந்த நபர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள்” என பொதுப் போக்குவரத்துத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரோயி (Saif Muhair Al Mazrouei) தெரிவித்தார்.

“நிறுவனங்கள் தங்களது டிரைவர்கள் போதுமான ஓய்வுடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகளவிலான மக்களை அழைத்துச்செல்லும் வேளையில் ஏற்படும் விபத்துகளினால் நிகழும் உயிரழப்புகளும் அதிகம்” எனவும் மஸ்ரோயி எச்சரித்தார்.