UAE Tamil Web

துபாய்: கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் நுழைந்த கார் – மூவர் காயம்..!

Accident

துபாயின் அல் ரஃபா பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று, கடையின் கண்ணாடித் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. இந்த விபத்தின் காரணமாக கடையில் பணிபுரிந்த மூவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

இதுகுறித்துப் பேசிய அல் ரஃபா காவல்நிலைய தலைமை இயக்குனர் பிரிகேடியர் அகமது தானி பின் காலிதா (Ahmed Thani bin Ghalita),” சாலையின் ஒருபுறத்திலிருந்து மற்றொரு புறத்திற்குச் செல்ல நினைத்த கார் ஓட்டுனர், பிரேக் பிடிப்பதற்குப் பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியிருக்கிறார். இதன்காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த கடையின் கண்ணாடித் தடுப்பை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது. அந்த இடத்தில் இருந்த சிலர் இதன் காரணமாக காயமடைந்தனர்” என்றார்.

காரை ஓட்டிச்சென்ற நபர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வாகனவோட்டிகள் சாலையின் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும்போது மிக கவனமாக இருத்தல் வேண்டும் என காலிதா குறிப்பிட்டார்.