UAE Tamil Web

தவறுதலாக காருக்குள் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுமி: துபாயில் சோகம்..!

Baby

துபாயில் தவறுதலாக காருக்குள் சிக்கிக்கொண்ட 4 வயது சிறுமி, மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாப்பிங் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிய தந்தை, தனது நான்கு குழந்தைகளையும் காரில் உள்ள பொருட்களை வீட்டிற்குள் எடுத்துச்செல்லுமாறு பணித்திருக்கிறார். அப்போது 4 வயது மகள் காருக்குள் இருப்பதை அறியாமல் தந்தை காரினை பூட்டிவிட்டு உள்ளே சென்றிருக்கிறார்.

அசதியாக இருந்ததால் நேரடியாக படுக்கைக்கு சென்றுவிட்ட தந்தை, இரண்டுமணிநேரம் கழித்தே குழந்தையைத் தேடத் துவங்கியுள்ளார். அப்போதுதான் காருக்குள் தனது மகள் அசைவின்றி கிடப்பதைப் பார்த்திருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, காருக்குள் இருந்ததால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கிறது.

துபாய் காவல்துறையின் குற்றவியல் பிரிவு இயக்குனர் கர்னல் மக்கி சல்மான் அகமது இதுகுறித்துப் பேசுகையில்,” இந்த சம்பவம் இரவு 7.30 மணிக்கு நேர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை நடத்திய விசாரணையில் இதில் சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது கட்டயாம். குறிப்பாக கோடைக் காலங்களில் காரில் அவர்களை அழைத்துச்செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது” என்றார்.

Baby
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap