UAE Tamil Web

துபாய்: சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் 62% குறைந்துள்ளது – காவல்துறை மகிழ்ச்சி..!

Dubai Police

2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்களின் அளவு 62% குறைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த காலப் பகுதியில் மரண விகிதமானது 100,000 பேருக்கு 1.8% என்ற வீதத்தில் பதிவாகியுள்ளது. முன்னதாக, காவல்துறை மரண விகிதத்தை 2.7% ஆக குறைப்பதாக இலக்கை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துபாய் காவல்துறையின் செயல்பாட்டுத் துறையின் துணை தலமைத் தளபதி முகமது சைஃப அல் ஸாஃபீன் (Mohammad Saif Al Zafeen) இதுகுறித்துப் பேசுகையில்,” காவல்துறையின் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையால் 147,561 பேர் பயனடைந்துள்ளார்கள்” என்றார்.

பாதசாரிகளின் பாதுகாப்பு, வாகனங்களை இயக்கும்போது போதுமான இடைவெளி விடுதல், விபத்துகள் இல்லா ரமலான், விபத்துகள் இல்லா கோடைகாலம் மற்றும் அதிவேகத்திற்கு எதிரான விழிப்புணர்வுத் திட்டம் போன்றவை துபாய் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dubai Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap