UAE Tamil Web

(Don’t Miss Out) துபாயில் 3 நாட்கள் நடைபெறுகிறது சூப்பர் சேல்(3DSS) – தேதிகள் அறிவிப்பு..

sale

துபாயில் 3 நாட்கள் நடைபெறும் சூப்பர் சேல்(3DSS) வார இறுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.The 3-Day Super Sale (3DSS) மெகா விளம்பரத்தின் நடப்பாண்டின் இறுதி பதிப்பு வரும் நவம்பர் 26 முதல் 28 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

இதனை அடுத்து துபாய் நகரின் மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களில் உள்ள லைஃப் ஸ்டைல், அழகு, ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல வகையான பொருட்களை அதிகபட்சம் 90% வரை சிறப்பு சலுகை விலையில் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் வாங்கி மகிழலாம்.

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் இறுதி வாரத்தில் நடைபெற உள்ள இந்த சூப்பர் விற்பனையில் பெரிய பிராண்டுகள் மற்றும் உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்கள் பங்கேற்கின்றனர். இதன் மூலம் சுமார்1,500 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகளில் உள்ள பொருட்கள் மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விலையில் கிடைக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

sale1

தொற்றுக்கு இடையே நடப்பாண்டில் நடைபெற உள்ள இந்த இறுதி துபாய் சூப்பர் சேலின் போது துபாய் நகரத்தின் அனைத்து கடைகள் மற்றும் மால்கள் பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கண்டிப்பாக கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 நாள் சூப்பர் சேல் என்பது துபாயின் வருடாந்திர ரீடெய்ல் நாட்காட்டியின்(Retail Calendar) ஒரு பகுதியாகும், இது முக்கிய ரீடெய்ல் விற்பனை விழாக்கள், புதிய சீசன் துவக்கங்கள், மெகா விற்பனை மற்றும் பிரத்தியேக ரீடெய்ல் அனுபவங்கள் மற்றும் நகரின் ரீடெய்ல் சமூகத்தை மேம்படுத்துவதற்கும், துபாயின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பங்களிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

3 நாட்கள் சூப்பர் சேலில் பங்கேற்கும் கடைகளின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சூப்பர் விற்பனை குறித்த விவரங்களுக்கு www.3daysupersale.com என்ற வெப்சைட்டை பார்வையிடவும்.