UAE Tamil Web

கோவிட்-19: தலைகீழான வெளிநாட்டு தம்பதி வாழ்க்கை.! ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் மனைவி.. நம்பிக்கையுடன் உதவி கோரியுள்ள கணவர்

covid.pg

இரு டீனேஜ் குழந்தைகளை கொண்ட தம்பதியருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வேலையற்ற அந்த குழந்தைகளின் தந்தை சமூக உறுப்பினர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கோரியுள்ளார்.

- Advertisment -

பாகிஸ்தானை சேர்ந்த அஹ்மத் சோஹைல் தொற்றுக்கான அறிகுறியில்லாமல் இருந்தாலும், அல் நஹ்தாவில் உள்ள தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், பங்களாதேஷை சேர்ந்த அவரது மனைவி ஷமிமா ஃபோஸி அல் தைத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் இருக்கிறார்.

shamima

கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளிக்கு போக முடியாத தம்பதியரின் 2 டீனேஜ் குழந்தைகளும், பெற்றோர் கோவிட்-19 தொற்றுடன் போராடி வரும் நிலையிலும் தங்களை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு தைரியமாக உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு துபாய்க்கு வந்த அஹ்மத் சோஹைல், ஒரு முன்னணி பாதுகாப்பு நிறுவனத்தில் மூத்த செயல்பாட்டு மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். 2019-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், வேலையை இழந்த போது தொடங்கியது சோஹைலின் துன்ப காலம்.

குழந்தைகளின் இயல்பான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சியை மதிப்பதை நோக்கமாக கொண்ட கல்வி முறையான மான்டேசொரி(Montessori) பயிற்றுவிப்பில் ஆசிரியரான அவரது மனைவி ஷமிமா, தனது வேலையை தொடர்ந்தார் மற்றும் குடும்பத்தை ஆதரித்தார்.

இருப்பினும், COVID-19 தொற்று காரணமாக இந்த குடும்பம் மீண்டும் மோசமானதொரு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தனது நிலை பற்றி கல்ஃப் நியூஸிடம் பகிர்ந்து கொண்டுள்ள சோஹைல், பாதுகாப்பு துறையில் எனக்கு நல்ல அனுபவம் உண்டு, மீண்டும் எனக்கு வேலை கிடைக்கும் எனநம்புகிறேன். எனது மகள் ஃபிசா(19), மகன் அகமது அஹ்ரம்(16) ஆகியோரின் கல்வியை சீர்குலைக்க விரும்பவில்லை.

எனவே எனது குடும்பத்திற்கு ஸ்திரத்தன்மையை வழங்க நான் விசா வாங்கினேன், தொடர்ந்து வேலைகளைத் தேடினேன். இருப்பினும் தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக எனது வாய்ப்புகள் மங்கிவிட்டன.என் மனைவியும் தனது நர்சரி பள்ளி வேலையை இழந்து விட்டார். நான் நம்பிக்கையை இழக்கவில்லை, பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து விண்ணப்பித்துள்ளேன்.

குடும்பத்தின் மோசமான நிதி சூழல் காரணமாக கல்வி கட்டணங்களை செலுத்த முடியாததால் எனது குழந்தைகள் பள்ளி படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. கடந்த 9 மாதங்களாக எனது வீட்டிற்கான வாடகையை நான் செலுத்தவில்லை. யாராவது எனக்கு வேலை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். எனது குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. சமூகத்தின் உதவியுடன் எனது எண்ணம் ஈடேறும் என்று நம்புகிறேன்

எனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எனது குடும்பத்தின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க நியாயமான இரண்டாவது வாய்ப்பைப் பெற முடியும் என்று காத்திருப்பதாக கூறியுள்ளார்.