UAE Tamil Web

திருடும்போது வெடித்துச் சிதறிய கேஸ் சிலிண்டர் – 2 ஆண்டுகளாக காவல்துறைக்கு தண்ணி காட்டிய குற்றவாளி..!

Gas-Cylinder-blast

துபாயில் திருட்டுத்தனமாக கேஸ் -ஐ நிரப்பி விற்றுவந்த கும்பல் ஒன்று துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்ப்ட்டிருக்கிறது. சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடந்தது. விஷயம் அதுவல்ல. இதில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி இரண்டாடுகள் தலைமறைவு வாழ்க்கைக்குப் பிறகு இப்போதுதான் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறான்.

துபாய் அல் அவீரில் உள்ள பண்ணை வீட்டில் காலியாக இருந்த அறையை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார் உரிமையாளர். தனது 2 கூட்டாளிகளுடன் இணைந்து அஜ்மானில் இருந்து கேஸ் சிலிண்டரை வரவழைத்து அதில் கேஸை நிரப்பி, துபாய் சீல் வைத்து அதனை விற்பனை செய்திருக்கிறார் ஆப்கான் ஆசாமி.

இப்படி ஒருநாள், காலி சிலிண்டரில் கேஸ் நிரப்புகையில் அது பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனால் அந்த அறை மற்றும் அதற்கு வெளியே உள்ள பகுதிகளில் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 2 குற்றவாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்தது. இருப்பினும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் தலைமறைவானார்.

சட்ட விரோதமாக 112 கேஸ் சிலிண்டர்களை வைத்திருந்தது, மினி பேருந்தில் சிலிண்டரை ஏற்றிச் சென்றது உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் துபாய் காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார். துபாய் நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிடிபட்ட அவரது கூட்டாளிகள் இருவருக்கும் 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் ஜெயிலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையின்போது தன்னுடைய குற்றச்சாட்டுகளை அவர் (ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்) ஒப்புக்கொண்டார்.

தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் மூவரும் நாடுகடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Gas-Cylinder-blast
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap