UAE Tamil Web

கோவிட்-19: 7 மாதங்களில் 6,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவளித்த துபாய் சர்ச்..

church

துபாயிலுள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம்(St Mary’s Church) கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், கடந்த 7 மாதங்களில் 6,000-க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உணவு உதவிகளை வழங்கியுள்ளது.

- Advertisment -

உணவு தேவைப்படுவோருக்கு உதவும் வகையில் இந்த தேவாலயம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு ‘மீல்ஸ் ஆஃப் கிரேஸ்’ (Meals of Grace) என்ற முயற்சியைத் துவக்கியது. ஊதியம் இல்லாமல் பசியில் வாடிய சுமார் 280 தொழிலாளர்களுக்கும்(blue collar workers) இது ஆதரவளித்தது.

இது பற்றி கூறியுள்ள குறிப்பிட்ட தேவாலயத்தை சேர்ந்த பாதிரியார் லென்னி ஜே. ஏ. கானுல்லி, இது போன்ற ஒரு சவாலான நேரத்தில் சரியான ஊட்டச்சத்து முற்றிலும் இன்றியமையாதது, இந்த சேவையை எங்களால் வழங்க முடியும் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த முன்முயற்சியின் மூலம், வேலைகள் இல்லாமல் சிக்கித் தவித்த பல தொழிலாளர்களை திருப்பி அனுப்பவும் எங்களால் உதவ முடிந்தது. சவாலான காலங்களில் சமூகங்கள் ஒன்றிணைவதற்கு துபாய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை இது போன்ற செயல்கள் நிரூபிக்கின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், ” நமது சமூகத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் தனியாக இல்லை என்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற செயல்கள் சிறப்பு வழியில் ஒரு சமூகத்தை அக்கறையுடன் உருவாக்கும் தேசிய முயற்சிக்கு பங்களிக்கின்றன என்றார்.