UAE Tamil Web

துபாய் : கால்நடை சந்தையில் பயங்கர தீ விபத்து..!

Dubai Civil Defence (2)

துபாய் : அல் குசைஸ் பகுதியில் உள்ள கால்நடை சந்தையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து துபாய் சிவில் பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தனர்.

- Advertisment -

வீரர்களின் துரித நடவடிக்கையால் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு, பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என துபாய் சிவில் பாதுகாப்புத்துறை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து ட்விட்டரில்,” அல் குசைஸ் பகுதியில் இருக்கும் கால்நடை சந்தை ஒன்றின் தீவன சேமிப்புப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தை துபாய் சிவில் பாதுகாப்புத் துறையினர் விரைந்து போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இத்தீவிபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.