UAE Tamil Web

துபாய்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இலவச டாக்சி வசதி..!

Abu-Dhabi-taxi

துபாயில் உள்ள மக்களிடையே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதை வலியுறுத்துவதை நோக்கமாகக்கொண்டு துபாய் டாக்சி (ஹாலா) இலவச பயணத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் துபாயில் நீங்கள் எங்கு இருந்தாலும் குறிப்பிட்ட கொரோனா தடுப்பூசி மையத்திற்கு (கீழே பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது) இலவசமாக டாக்சியில் பயணிக்கலாம்.

கரீம் அப்ளிகேஷனில் HALAVAC என்ற ப்ரோமோகோடைப் பயன்படுத்தி உங்களுக்கான இலவச பயணத்தை புக் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்துப் பேசிய ஹாலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (Clemence Dutertre) க்ளமென்ஸ் டியூட்டர்ட்ரீ,” சமூகம் இத்தகைய சிக்கலில் (கொரோனா) தவிக்கும் போது, அதனை மீட்டெடுக்கும் அரசின் பணியில் எங்களுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என விரும்பினோம். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் நிச்சயம் பலனளிக்கும் என நம்புகிறோம். இதன்மூலம் ஆர்வலர்கள் தங்களது வீட்டிலிருந்து பாதுகாப்பான மற்றும் இலவசமாக கொரோனா தடுப்பூசி மையத்திற்குப் பயணிக்கலாம்” என்றார்.

இரண்டு பயணங்களுக்கு (அதிகபட்சமாக 30 திர்ஹம்ஸ்) 100 சதவிகித கட்டணத் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த சலுகையைப் பெற கட்டணத்தை நீங்கள் பணமாகவோ அல்லது கார்டு மூலமாகவோ செலுத்த வேண்டும். வாலேட் (wallet) மூலமாக பணம் செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி 18 ஆம் தேதிவரையில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும்.

கொரோனா தடுப்பூசி மையங்கள்

  • அலித்திஹாட் சுகாதார மையம்.
  • ஹோர் அல் அன்ஸ் சுகாதார மையம்.
  • அல் குசைஸ் சுகாதார மையம்.
  • ஸபீல் ஆரம்ப சுகாதார மையம்.
  • அல் மிஷார் ஆரம்ப சுகாதார மையம்.
  • நாத் அல் ஹம்ர் ஆரம்ப சுகாதார நிலையம்.
  • அல் பர்ஷா ஆரம்ப சுகாதார மையம்.
  • அல் சஃபா ஆரம்ப சுகாதார மையம்.
  • ஒன் செண்ட்ரல் (One Central).
  • துபாய் பார்க் மற்றும் ரிசார்ட்ஸ்.

எப்படி இந்த ஆஃபரைப் பயன்படுத்துவது?

  • கரீம் அப்ளிகேஷனில் ஹாலா டாக்சி என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய பயண புறப்பாட்டு இடம் மற்றும் நீங்கள் செல்லவேண்டிய மருத்துவ மையத்தினை (மேலே குறிப்பிட்டவற்றுள்) தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களுக்குத் தகுந்த பயணத்தை தேர்ந்தெடுக்கவும்: ஹாலா (துபாய் டாக்சி) அல்லது ஹாலா வேன் (துபாய் டாக்சி).
  • திரையின் கீழே உள்ள டிஸ்கவுண்ட் என்பதைக் கிளிக் செய்து, HALAVAC என்ற ப்ரோமோகோடை உள்ளிடவும்.