UAE Tamil Web

துபாய்: ரமலான் துவங்கும் வரையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு இருக்காது – அரசு அறிவிப்பு..!

corona

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பிப்ரவரி மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ரமலான் துவக்கம் வரையில் (ஏப்ரல் மத்தியில்) நடைமுறையில் இருக்குமென ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

- Advertisment -

தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்தில்கொண்டும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மூத்த அதிகாரிகள் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து கொரோனா தாக்கத்தைக் குறைக்க பல்வேறு வகையில் முயன்று வருவதாக ஷேக் மன்சூர் தெரிவித்தார்.

New-set-of-precautionary-measures-against-COVID-19_

என்னென்ன கட்டுப்பாடுகள்?

உள் அரங்கங்கள்

தியேட்டர், விளையாட்டு மையம் போன்ற இருக்கைகள் கொண்ட உள் அரங்கங்களில் அதிகபட்சமாக 50 சதவிகித மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.

ஹோட்டல்

ஹோட்டல்கள் தங்களது மொத்த திறனில் 70 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கவேண்டும். புதிய புக்கிங்குகளுக்கும் இது பொருந்தும்.

நீச்சல்குளம் மற்றும் கடற்கரை

நீச்சல் குளங்களில் அதிகபட்சமாக அதன் மொத்த திறனில் 70 சதவிகிதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மால்கள்

மால்கள் அதிகபட்சமாக அதன் மொத்த திறனில் 70 சதவிகிதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க ஆய்வுக் குழு தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தல்

தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனம் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமீறலில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் புகாரளிக்க 901 என்ற எண்ணிற்கு போன் செய்தோ அல்லது துபாய் காவல்துறை ஸ்மார்ட் அப்ளிகேஷனின் Police Eye என்னும் வசதி மூலமாகவோ புகாரளிக்கலாம்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.