UAE Tamil Web

கொரோனா அச்சம்: நிகழ்ச்சிகள் நடத்த மற்றும் உணவகங்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கிய துபாய் அரசு..!

Dubai Hotel

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக உணவகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உச்ச சபை நேற்று வெளியிட்டுள்ளது.

சமூக இடைவெளி

உணவகங்களில் இரு டேபிள்களுக்கு இடையேயான இடைவெளி 2 மீட்டரிலிருந்து 3 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரெஸ்டாரன்ட்களில் ஒரு டேபிளுக்கு அதிகபட்சமாக 10 பேர் அமரலாம் என்பதை விலக்கி தற்போது 7 பேர் மட்டுமே அமரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஃபேக்களில் அதிகபட்சமாக டேபிளுக்கு 4 பேர் அமரலாம் என ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது நிகழ்ச்சிகள், திருமணம்

துபாயில் ஜனவரி 27 ஆம் தேதி முதல் நடத்தப்படும் சமூக நிகழ்ச்சிகள், திருமணம் மற்றும் பார்ட்டிகளில் அதிகபட்சமாக 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம். அதுவும் முதல்நிலை உறவினர்களாக இருத்தல் வேண்டும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

வீடு மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும் இது பொருந்தும்.

Dubai Hotel
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap