கோவிட் -19 முன்னெச்சரிக்கை விதிகளை மீறியதற்காக போக்குவரத்து சேவை நிறுவனம் ஒன்றிற்கு துபாய் அபராதம் விதித்துள்ளது.
துபாய் பொருளாதார ஆய்வாளர்கள் வழக்கமான கள ஆய்வுகளில் ஈடுபட்டனர். நைஃப் பகுதியில் நடந்த ஆய்வில் ஊழியர்கள் முகக்கவசம் அணியாதது உட்பட பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்திற்காக போக்குவரத்து சேவை நிறுவன நிறுவனம் ஒன்றுக்கு துபாய் பொருளாதார துறை அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பான தகவலை துபாய் பொருளாதாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. தங்களது சமீபத்திய ஆய்வின் போது கோவிட் -19 பரவுவதை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 525 வணிக நிறுவனங்கள் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக எந்த நிறுவனத்திற்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை அல்லது மூடப்படவில்லை என கூறியுள்ளது.
Dubai Economy fined a transport service agency for not adhering to the precautionary measures set to limit the spread of COVID-19, including not wearing face masks in the Naif area.
With no closures or warnings.
While 525 businesses found compliant. pic.twitter.com/Xx0Bo2U2BO
— اقتصادية دبي (@Dubai_DED) December 1, 2020
பொது சுகாதாரத்திற்கு முதல் முன்னுரிமையாக வழங்கப்படும் என்று கூறியுள்ள துபாய் பொருளாதாரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறினால் டுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நினைவூட்டியுள்ளது. தொற்று அச்சுறுத்தல் இருந்தாலும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும், அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கவும் பொதுமக்களை துபாய் பொருளாதாரம் வலியுறுத்தியுள்ளது.
தொற்று நீடித்த போதும் துபாயில் படிப்படியாக இயல்பான மற்றும் பாதுகாப்பான பொருளாதார நடவடிக்கைகள் துவங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விதி மீறல் குறித்த புகார்களை துபாய் நுகர்வோர் பயன்பாட்டின் மூலமாகவோ அல்லது 600545555 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ, நுகர்வோர் உரிமைகள் வெப்சைட் மூலம் தெரிவிக்க துபாய் பொருளாதாரம் அழைப்பு விடுத்துள்ளது.