UAE Tamil Web

துபாய் வாழ் மக்கள் கவனத்திற்கு: இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் 120 இடங்களின் பட்டியல்..!

Corona Vaccine

துபாயில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கும் இடங்கள் 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்திருக்கிறது. மக்களிடையே இலவச தடுப்பூசி குறித்த வரவேற்பு அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போடப்படும் மருத்துவமனைகள்

  • ஆஷித் மருத்துவமனை.
  • துபாய் மருத்துவமனை.
  • லத்தீபா மருத்துவமனை.
  • ஹட்டா மருத்துவமனை.
  • அப்டவுன் மிர்டிஃப் மருத்துவ உடற்தகுதி மையம் (Uptown Mirdiff Medical Fitness Centre)
  • மெடிகிளினிக் மருத்துவமனை நெட்வொர்க் (13 இடங்கள்)
  • மூன்று மொபைல் நிலையங்கள்.

துபாயில் கீழ்க்கண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

  • அல் மிஷார்.
  • ஸபீல்.
  • அல் பர்ஷா.
  • நாத் அல் ஹமார்.
  • அல் சஃபா.
  • அல் பதா.
  • நாத் அல் ஷெபா.
  • அல் மன்கூல்.
  • அல் த்வார்.
  • அல் லிசைலி.

அதுபோல, கீழ்க்கண்ட இடங்களிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படுகிறது.

  • யூனியன் சுகாதார மையங்கள்.
  •  ஹோர் அல் அன்ஸ் சுகாதார மையம்.
  • அல் குசைஸ் சுகாதார மையம்.
  • துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் கள மருத்துவமனை. (Dubai Parks & Resorts Field Hospital)
  • அல் கவனீஜ் மற்றும் போர்ட் ரஷீத் பரிசோதனை மையங்கள்.
  • எமிரேட்ஸ் சிறப்பு மருத்துவமனை (22 இடங்கள்).
  • புர்ஜீல் நெட்வொர்க்.
  • வி.பி.எஸ் நெட்வொர்க் (இரண்டு இடங்கள்).
  • என்.எம்.சி மருத்துவமனைகள் நெட்வொர்க் (ஒன்பது இடங்கள்).

இலவச கொரோனா தடுப்பூசித் திட்டத்தை வேகப்படுத்தும் நோக்கத்தோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இலவச தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இருப்பதாக துபாய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

துபாய் உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய கொரோனா தடுப்பூசி மையத்தில் ஒரு நாளைக்கு 4000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு செய்ய DHA அப்ளிகேஷன் அல்லது 800-342 என்ற இலவச தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் உள்ள மொத்த இலவச கொரோனா தடுப்பூசி மையங்களின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

Corona Vaccine
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap