UAE Tamil Web

துபாய்: 3 நாட்களுக்கு இலவச பார்க்கிங் – RTA அறிவிப்பு..!

parking dubai

துபாயின் துணை ஆட்சியாளரும் அமீரக நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் நேற்று காலமானார். இதனைத் தொடர்ந்து துபாய் முழுவதிலும் உள்ள துபாய் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு நேற்று அறிவித்திருந்தது.

- Advertisment -

இதனைத் தொடர்ந்து துபாய் முழுவதிலும் உள்ள பொதுப் பார்க்கிங் இடங்களில் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக 3 நாட்களுக்கு நிறுத்திக்கொள்ளலாம் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பல அடுக்கு பார்க்கிங் இடங்கள் (Multi-Storey Parking) தவிர்த்து துபாயில் உள்ள அனைத்து பொதுப் பார்க்கிங் இடங்களிலும் இன்று முதல் (25/3/21) சனிக்கிழமை (27/3/21) வரையில் இலவச பார்க்கிங் திட்டம் அமலில் இருக்கும் என RTA தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம்போல பார்க்கிங் இடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.