UAE Tamil Web

அதிக திறன் மற்றும் புதிய வடிவமைப்புகளுடன் துபாய் வந்திறங்கிய புத்தம் புதிய 50 மெட்ரோ ரயில்கள் (வீடியோ)..

metro

அதிக சீட்கள் மற்றும் மேம்பாடுகளுடன் துபாய் மெட்ரோவின் 50 புத்தம் புதிய ரயில்கள் வந்துவிட்டதாக RTA அறிவித்துள்ளது. துபாய் நகரின் பயணிகளுக்கு மிகவும் வசதியான பயணங்களை இது வழங்கும் என்று RTA-வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மட்டார் முகமது அல் தயேர் உறுதி அளித்துள்ளார்.

- Advertisment -

50 புதிய ரயில்களில் எக்ஸ்போ 2020 ரூட்டில் சேவை செய்ய 15 ரயில்களும், மற்ற 35 ரயில்கள் தற்போதுள்ள துபாய் மெட்ரோவின் சேவையின் அளவை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட உள்ளன. புதிய ரயில்கள் பற்றி கூறியுள்ள மட்டார் முகமது, ரயில்களின் உட்புறங்களில் “விரிவான மேம்பாடுகள்” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை மிகவும் விசாலமானவை என்றும் கூறியுள்ளார்.

metro2

புதிய வடிவமைப்பில் இருக்கைகள் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு ரயிலின் திறனும் 8% அதிகரித்துள்ளது. எனவே புதிய மெட்ரோ ரயில்களில் 643 ரைடர்ஸ்களுக்கு பதிலாக 696 ரைடர்ஸ் வரை செல்ல முடியும். கடைசி கேரேஜ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானது. நிற்கும் பயணிகளுக்கான இடத்தை விரிவுபடுத்த லக்கேஜ் பெட்டியின் வடிவமைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

metro1

பிற மேம்பாடுகளில் கிராப் ஹேண்டில்கள் மற்றும் லைட்டிங் ஆகியவற்றிற்கான புதிய வடிவமைப்புகள் மற்றும் புதிய டிஜிட்டல் விளம்பர காட்சிகளின் பயன்பாடு ஆகியவை அடங்கும். மேலும் மெட்ரோ பாதை மற்றும் நிலையங்களைக் குறிக்க ஒரு ஒளிரும் டைனமிக் லைன் வரைபடம் பயன்படுத்தப்படும், LED பவர் சேவிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விளக்குகள் ஒளிரவிடப்படும் என்றும் மட்டார் முகமது கூறியுள்ளார்.

புதிய துபாய் மெட்ரோ ரயில்களின் வெளிப்புற வடிவமானது பொதுமக்களுக்கு நன்கு பழக்கமான துபாய் மெட்ரோவின் வடிவமைப்பு, அடையாளம் மற்றும் வண்ணங்களை பராமரிக்கும் வகையில் மாறுதல்கள் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அல் ரஷீதியா மற்றும் ஜெபல் அலி ஆகிய இடங்களில் உள்ள துபாய் மெட்ரோ டிப்போக்களில் புதிய ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. RTA தற்போது துபாய் மெட்ரோ ரெட் லைன் பாதை 2020-ல் ரயில்களின் செயல்பாட்டு சோதனைகளை நடத்தி வருகிறது.

4 கட்டங்களை உள்ளடக்கிய இந்த சோதனையின் முதலாம் கட்டம் என்பது நிலையான சோதனை. இதில் இயக்கமற்ற மெட்ரோ கேரேஜ் ஆனது, கவல்தொடர்பு அமைப்புகள், தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், மின்சாரம் வழங்கல் அமைப்பு, ஏர் கண்டிஷனிங், உள் மின்னணு உபகரணங்கள், லைட்டிங் அமைப்புகள் ஆகியவை சரியாக உள்ளனவா என்பதை பரிசோதிக்க தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு டிராக்கில் நிறுத்தப்படுகிறது.

இரண்டாம் கட்டம் டைனமிக் பரிசோதனையாகும். இது இயக்கத்தில் இருக்கும் ரயிலில் தொடர்ச்சியான உள் சோதனைகளை உள்ளடக்கியது. ரோலிங் ஸ்டாக் கவர் மின் மோட்டார்கள், பிரேக் சிஸ்டம்ஸ், இயல்பான மற்றும் அவசரகால நிகழ்வுகளின் போது செயல்பாட்டு செயல்திறன் சோதனைகள், பவர் சிஸ்டம்ஸ், தானியங்கி ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் இந்த கட்டத்தில் சோதிக்கப்படுகிறது.

metro123

மூன்றாம் கட்ட சோதனையானது நம்பகத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை சரிபார்க்கும் செயல்பாட்டு சோதனைகளுடன் தொடர்புடையது. இந்த கட்டத்தில் பயணிகள் இல்லாமல் வழக்கமான செயல்பாட்டைப் போன்ற ஒரு பாணியில் சிஸ்டம் தொடர்ந்து இயங்கும். இயக்க செயல்திறன் முழுமையாக எட்டப்படுகிறதா என்று சரிபார்க்கப்படும்.

இறுதி மற்றும் நான்காம் கட்ட சோதனையானது மெட்ரோ ஆபரேட்டரால் நடத்தப்படும் ‘செயல்பாட்டு சோதனைகள்’ ஆகும். இது சேவையின் உண்மையான செயல்பாட்டைத் தொடங்கும் முன் ஆப்பரேட்டரின் தயார்நிலையை சரிபார்க்கும் நோக்கமுடையது. சாதாரண மற்றும் அவசரகால முறைகள் உட்பட அனைத்து சூழலிலும் மெட்ரோ அமைப்பின் செயல்பாட்டை சோதிக்க பயனைகளின்றி சுமார் 14 நாட்கள் செயல்படுவது இதில் அடங்கும்.