UAE Tamil Web

துபாய்: DHA App-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பல புதிய அம்சங்கள்.!! இனி இதையெல்லாம் நீங்கள் மொபைலிலேயே செய்யலாம்..

DHA

சமூக உறுப்பினர்களுக்கு கூடுதல் வசதியை வழங்க துபாய் சுகாதார ஆணையம் (DHA) தனது மொபைல் App-ல் சில புதிய அம்சங்களை சேர்த்துள்ளது.

- Advertisment -

இதன் மூலம் கோவிட் -19 திரையிடலுக்கான சந்திப்பை முன்பதிவு செய்வது, DHA சுகாதார மையங்களில் காய்ச்சல் தடுப்பூசி பெற சந்திப்பை முன்பதிவு செய்வது உள்ளிட்ட பல முக்கிய சுகாதார சேவைகளை அணுக பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் இது முழுமையான சந்திப்பு முன்பதிவு நிர்வாகத்தை(appointment management) வழங்குகிறது. DHA மையங்களில் பயனர்கள் முன்பதிவு செய்வது, புக்கிங் நேரத்தை மாற்றியமைத்து கொள்வது, மற்றும் ரத்து செய்வது உள்ளிட்டவை அடங்கும்.

DHA-வின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூத்த கணினி ஆய்வாளர் பகிதா இஸ்மாயில், ஜிடெக்ஸ் தொழில்நுட்ப வாரத்தில் இந்த அம்சங்களை எடுத்துரைத்தார். பல முக்கியமான சேவைகளை நாங்கள் சேர்த்துள்ளோம். DHA மையங்களை பயன்படுத்தும் நோயாளிகளுக்கும் அவர்களது அனைத்து சோதனை அறிக்கைகளும் எங்களது App மூலம் கிடைக்கும். பயனர்கள் தங்களது சோதனை முடிவுகளை தேவைப்பட்டால் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

dha1

அதே போல டெலிமெடிசின் ஆலோசனைக்கு நோயாளிகள் ஒரு அப்பாயின்ட்மென்டை புக் செய்யலாம், App-ஐ பயன்படுத்தி நோயாளிகள் தங்கள் ஹெல்த் கார்டையும் புதுப்பித்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். DHA App-ல் இருக்கும் அம்சங்களில் எந்த நேரத்திலும் நோயாளிகள் தங்களது மெடிக்கல் ரெக்கார்டுகள், லேப் அறிக்கைகள் மற்றும் மருந்து சீட்டுகளை பெறலாம்.

மேலும் அனைத்து DHA மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார பராமரிப்பு மையங்கள், சிறப்பு கிளினிக்குகள் மற்றும் மருத்துவ உடற்பயிற்சி மையங்கள் பற்றிய விவரங்களையும் பயனர்கள் தேடி பயன்படுத்தி கொள்ளலாம்.

DHA App ஆனது குடியிருப்பாளர்கள் ரத்த தானத்திற்காக தங்கள் விவரங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது. ரத்த நன்கொடையாளர்களின் பெரிய தரவுத்தளத்தை உருவாக்க இது உதவும். “அரிய வகை ரத்தத்திற்கு தேவை ஏற்படும் போது இது முக்கிய பங்கு வகிக்கும். ரத்த தானம் செய்பவர்களுக்கு அருகிலுள்ள நன்கொடை மையம் அல்லது நடமாடும் ரத்த தான பிரிவு ஆகியவற்றைக் கண்டறிய தங்களது App அனுமதிக்கிறது என்று DHA கூறியுள்ளது.