UAE Tamil Web

“ராத்திரி யாருக்கு மெசேஜ் அனுப்புனிங்க” கேள்விகேட்ட மனைவியின் கழுத்தை நெரித்த கணவர் – துபாயில் பரபரப்பு..!

jail

அந்தத் தம்பதிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது. 27 வயதான கணவர் அவ்வப்போது அடித்தாலும் குடும்ப வாழ்க்கை சிதைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இதுபற்றி வெளியே சொல்லாமல் இருந்திருக்கிறார் மனைவி.

ஆனால் எல்லா பொறுமையும் ஒரு கட்டத்தில் கைமீறும் அல்லவா? அப்படித்தான் ஆகிவிட்டது கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சம்பவம்.

வழக்கம்போல இரவு தூங்கியதற்குப் பிறகு, ஏதோ சப்தம் கேட்டு விழித்த மனைவி, கணவர் போன் உபயோகிப்பதைப் பார்த்திருக்கிறார். அடுத்தநாள் அதுகுறித்து எதார்த்தமாக கணவரிடம் கேட்க, பிரச்சினை வெடித்திருக்கிறது.

ஆக்ரோஷமாகக் கத்திய கணவர், ஒருகட்டத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தனது மனைவியைத் தாக்கியிருக்கிறார். இதனால் அவரது கால்கள் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தனது கணவர் தன் கழுத்தை நெரித்ததாகவும் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

இதனையடுத்து நன்னடத்தை நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், பெண்ணைத் தாக்கியது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றங்களுக்காக பெண்ணின் கணவருக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டிற்குச் சென்றார் கணவர். அங்கே, அவரது தண்டனைக்காலம் 1 மாதமாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும் குற்றவாளி தனது குற்றத்தை விசாரணையின்போது ஒப்புக்கொள்ளவில்லை.

jail
1 Share
Share via
Copy link