UAE Tamil Web

கொரோனா காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்த துபாய்: இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன..!

Stock-Dubai-skyline

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய கட்டுப்பாடுகளை பெருமதிப்பிற்குரிய ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்த புதுப்பிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றன.

ஷேக் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தினசரி நிலவரங்களின் அடிப்படையில் கொரோனா வழக்குகள் அதிகரித்திருப்பதாக விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பே அரசின் முதன்மை நோக்கம் எனவும் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New-set-of-precautionary-measures-against-COVID-19_
Image Credit: DMO and Seyyed Llata/Gulf News

புதிய கட்டுப்பாடுகள்

உள் அரங்கங்கள்

தியேட்டர், விளையாட்டு மையம் போன்ற இருக்கைகள் கொண்ட உள் அரங்கங்களில் அதிகபட்சமாக 50 சதவிகித மக்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.

ஹோட்டல்

ஹோட்டல்கள் தங்களது மொத்த திறனில் 70 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்கவேண்டும். புதிய புக்கிங்குகளுக்கும் இது பொருந்தும்.

நீச்சல்குளம் மற்றும் கடற்கரை

நீச்சல் குளங்களில் அதிகபட்சமாக அதன் மொத்த திறனில் 70 சதவிகிதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மால்கள்

மால்கள் அதிகபட்சமாக அதன் மொத்த திறனில் 70 சதவிகிதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க ஆய்வுக் குழு தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளித்தல்

தனிப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனம் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமீறலில் ஈடுபடுவது குறித்து பொதுமக்கள் புகாரளிக்க 901 என்ற எண்ணிற்கு போன் செய்தோ அல்லது துபாய் காவல்துறை ஸ்மார்ட் அப்ளிகேஷனின் Police Eye என்னும் வசதி மூலமாகவோ புகாரளிக்கலாம்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.

Stock-Dubai-skyline
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap