UAE Tamil Web

“பயணிகள் இவற்றைச் செய்யத் தவறவேண்டாம்” – துபாய் விமான நிலையத்தின் சமீபத்திய அறிவிப்பு..!

Dubai Airports turns 60

புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 – 7 ஆம் தேதிகளில் சுமார் 545,000 மக்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் மூலமாக பயணிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நெரிசல் அதிகமாக இருக்கும் என துபாய் விமான நிலையம் அறிவித்திருக்கிறது.

- Advertisment -

இத்தகைய காலகட்டத்தில் எளிமையாகவும் சிரமமின்றியும் வாடிக்கையாளர்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள செய்யவேண்டியவை குறித்து துபாய் விமான நிலையம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்,

  • உங்களுடைய பயணத்திற்கான தேவைகள் குறித்து உங்களுடைய விமான நிறுவனம் மற்றும் துபாய் விமான நிலையத்தின் முனையம் மூலமாகவும் தெரிந்துகொள்ளவும்.
  • பயணத்திற்கு முன்னர், உங்களுடைய PCR பரிசோதனை முடிவை ஆங்கிலம் அல்லது அரேபிய மொழியில் பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.
  • விமான நிலையத்திற்குள் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக விலகலைக் கடைபிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து நேரங்களிலும் மேற்கொள்ளவும்.
  • கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக பயணத்தை ரத்து செய்துவிட்டு, மருத்துவரை அணுகவும்.
  • பாஸ்போர்ட், விசா, நீங்கள் செல்லும் நாடு விதித்திருக்கும் பயண விதிமுறைகள் குறித்த ஆவணங்கள் ஆகியவை சரியாகவும் உரிய காலக்கெடுவுடன் இருப்பதை பயணத்திற்கு முன்னர் உறுதிசெய்துகொள்ளுங்கள்.
  • விமான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாம்.

– என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.