UAE Tamil Web

துபாய்: மொபைல் இரத்ததான மையம் அறிமுகம் – உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறு அரசு வேண்டுகோள்..!

mobile blood donation camp

துபாய் சுகாதார மையம் மொபைல் இரத்ததான மையத்தினை துவங்க இருக்கிறது. ஏப்ரல் 1 ஆம் தேதிமுதல் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் இத்திட்டத்தின் மூலம் துபாயின் முக்கிய இடங்களில் உள்ள மக்களிடமிருந்து இரத்தத்தினைப் பெற்று அமீரகத்தின் முக்கிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசர இரத்த தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.

துபாய் ஹோல்டிங் மற்றும் துபாய் இரத்ததான மையம் (DBDC) ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் “சிறந்த பரிசு என்பது உயிரைக் காப்பாற்றுதலே” எனப் பொருள்படும் The Perfect Gift is Saving Lives என்ற திட்டத்தை மேற்கொள்ள இருக்கின்றன. இந்தப் பேருந்து துபாய் முழுவதிலும் மொத்தம் 16 இடங்களில் முகாமிட இருக்கிறது.

துபாய் ஹோல்டிங் சமூக மற்றும் நிறுவனங்கள் இருக்கும் சிட்டி வாக், தி பீச், லா மெர், ப்ளூ வாட்டர்ஸ், லாஸ்ட் எக்ஸிட் அல் கவனீஜ், பாக்ஸ்பார்க், முதோன், தி வில்லா, ஷோரூக், கோரூப், லயன், ரெம்ராம், அல் கைல் கேட், ஜுமேய்ரா எமிரேட்ஸ் டவர், பர்ஷா ஹைட்ஸ் மற்றும் பிசினஸ் பே பகுதியில் உள்ள எக்சியூடிவ் டவர்ஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் 300,000 மக்களிடம் இருந்து இரத்தத்தினை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

149 நாடுகளைச் சேர்ந்த 65,300 பதிவு செய்த இரத்ததான உறுப்பினர்களிடம் இருந்து இரத்தத்தினை பெற்று அதில் பாதியளவை அமீரகம் முழுவதிலும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க இருப்பதாக DBDC தெரிவித்துள்ளது. இரத்தம் மட்டுமல்லாது இரத்த தட்டுகள் (platelets) மற்றும் பிளாஸ்மா (plasma) ஆகியவற்றையும் DBDC வழங்கிவருகிறது.

mobile blood donation camp
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap