UAE Tamil Web

புத்தாண்டுக் கொண்டாட்டம்: மெட்ரோ, டிராம் இயங்கு நேரங்களில் மாற்றம் – RTA அறிவிப்பு..!

rta

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு துபாயில் உள்ள டவுண்டவுனில் நிகழ்ச்சி ஒன்றினை துபாய் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மெட்ரோ மற்றும் டிராம்கள் இயங்கும் நேரத்தினை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மாற்றியமைத்திருக்கிறது. அதன்படி,

- Advertisment -

டிசம்பர் 31 (வியாழக்கிழமை) மாலை 5 மணி முதல் ஜனவரி 1 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை புர்ஜ் கலீஃபா நிலையம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ

ரெட் லைன்: டிசம்பர் 31 (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் ஜனவரி 2 (சனிக்கிழமை) அதிகாலை 1 மணி வரை என மொத்தம் 44 மணி நேரம் செயல்படும் என்று RTA அறிவித்திருக்கிறது.

கிரீன் லைன்: டிசம்பர் 31 (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் ஜனவரி 2 (சனிக்கிழமை) அதிகாலை 1 மணி வரை 43.5 மணி நேரம் செயல்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராம்கள்

டிசம்பர் 31 காலை 6 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 1 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

“பல்வேறு நிறுவனங்களுடன் நிகழ்த்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் உதவியுடன் இந்த வருடத்திற்கான புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை கண்காணிக்க பாதுகாப்புக் குழு தயாராக உள்ளது. துபாய் காவல்துறை அதிகாரிகள் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட திட்டங்கள் மூலம் சுற்றுலாத்தலங்கள் மற்றும் போக்குவரத்தை கண்காணிப்பார்கள்” என துபாய் காவல்துறையின் தலைமைத் தளபதியான அப்துல்லா கலீஃபா அல் மர்ரி (Abdullah Khalifa Al Marri) தெரிவித்திருக்கிறார்.