UAE Tamil Web

துபாய் காவல்துறையில் தடயவியல் பயிற்சி பெற ஆசையா? – எப்படி விண்ணப்பிப்பது?

-dubai-police_

துபாய் காவல்துறையின் கீழ் இயங்கிவரும் தடய அறிவியல் மற்றும் குற்றவியல் பிரிவு தடய அறிவியல் குறித்த பயிற்சி வகுப்பினை நடத்த இருப்பதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு துறை அறிவையும் பெற உதவும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,”தடய அறிவியல் மற்றும் குற்றவியல் துறை நடத்தும் தடய அறிவியல் பற்றிய பயிற்சி வகுப்புகள் துவங்க இருக்கின்றன. பல்வேறு துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க உதவிசெய்யும் நோக்கத்தோடு இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ள மாணவர்கள் Frn.training@dubaipolice.gov.ae என்ற இணைய முகவரியில் துபாய் காவல்துறையை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.