UAE Tamil Web

முகக்கவசம் அணியாத 443 பேருக்கு அபராதம் : அதிரடி காட்டிய துபாய் போலீஸ்..!

Pharmaceutical-workers-wear-face-masks-to-serve-customers-in-a-pharmacy-in-Barcelona--Spain--on-Sunday--

துபாய்: கொரோனா பெருநோயில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசிகள் அமீரகம் முழுவதும் இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுத்திகரிப்பு, விதிமுறைகளில் மாற்றம் என அரசு தீவிரமாக கொரோனாவிற்கு எதிராகப் போராடிவரும் நிலையில் பொதுமக்களில் சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்கத் தவறுகிறார்கள்.

உதாரணமாக, துபாய் காவல்துறை இன்று புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் முகக்கவசம் அணியாத 443 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், விதிமுறைகளை மீறியதாக 1,569 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி 17 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

இந்த மாதத்தில் துபாயில் உள்ள 5 மால்களில் நடத்தப்பட்ட ரோந்துப் பனியின் மூலம் இந்த அபராதங்களானது விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

NAT-210128-Dubai-police-issued-fines
Image Credit: gulfnews
Pharmaceutical-workers-wear-face-masks-to-serve-customers-in-a-pharmacy-in-Barcelona--Spain--on-Sunday--
0 Shares
Share via
Copy link