UAE Tamil Web

பிரிட்டனில் காணாமல்போன இளம்பெண் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் துபாயில் கண்டுபிடிப்பு – பெண்ணை குடும்பத்தாருடன் இணைத்து வைத்த துபாய் காவல்துறை..!

Dubai Police

பிரிட்டனில் காணாமல்போன இளம்பெண் ஒருவர் அமீரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது குடும்பத்தாரிடம் மீண்டும் இணைந்துள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் அப்துல்லா அல் ஷேக்,” தனது பெற்றோரிடம் கூடத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறிய 19 வயது இளம்பெண் அமீரகம் வந்திருக்கிறார். துபாயில் உள்ள விடுதி ஒன்றில் தங்குவதற்காக சென்ற அப்பெண்ணின் நிலையைக் கண்டு விடுதி நிர்வாகம் துபாய் காவல்துறைக்கு தகவல் அளித்தது” என்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பெண் தனது வீட்டாரிடம் சொல்லாமல் அமீரகம் வந்திருப்பதை அறிந்துகொண்டனர். பிரிட்டன் துணைத் தூதரகத்தில் விசாரித்தபோது, பெண்ணின் பெற்றோர் தங்களுடைய மகள் காணாமல் போயிருப்பதாக காவல்துறையில் புகாரளித்திருப்பது தெரியவந்திருக்கிறது.

துபாயில் உள்ள சுற்றுலாத்தளங்களை பார்த்த பிறகு அமீரகம் வர அந்தப் பெண் மிகவும் விரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இலவச தங்குமிடம்

இளம்பெண் தனது தாயகத்திற்கு செல்வதற்கு முந்தைய இரண்டு வாரங்களும் துபாய் காவல்துறை அளித்த இலவச தங்குமிடத்தில் தங்கியிருந்தார். அவரது துணைக்காக பெண்ணின் அத்தை வரவழைக்கப்பட்டிருக்கிறார். அவர்களுக்கான தேவைகள் மற்றும் கண்காணிப்பை துபாய் காவல்துறை வழங்கியது. சுற்றுலா வாசிகள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது துபாய் காவல்துறையின் முதன்மை நோக்கமாகும் என அல் ஷேக் தெரிவித்தார்.