UAE Tamil Web

துபாய்: 44 வாகனங்கள், 247 சைக்கிள்கள் மற்றும் 16 இ-ஸ்கூட்டர்கள் பறிமுதல்.!

vechiles

போக்குவரத்து சட்டங்கள் மற்றும் சாலை பாதுகாப்புகளை மீறியதற்காக அல் ரஷீதியாவில் கடந்த 11 மாதங்களில் 44 வாகனங்கள், 247 சைக்கிள்கள் மற்றும் 16 இ-ஸ்கூட்டர்கள் உள்ளிட்டவற்றை துபாய் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

- Advertisment -

இது பற்ற தகவல் தெரிவித்துள்ள அல் ரஷீதியா காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் சயீத் ஹமாத் பின் சுலைமான் அல் மாலிக், பொறுப்பற்ற ஓட்டுனர்களால் அடிக்கடி தொந்தரவுகள் நிகழ்ந்த மூன்று பகுதிகளை போலீஸ் ரோந்து கண்காணித்தன. வார இறுதியில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய மற்றும் நள்ளிரவில் பொது சாலைகளில் பந்தயத்தில் ஈடுபட்டஇருவர் எங்கள் ரோந்துப் படையினரால் கைது செய்யப்பட்டனர். பிற சாலை பயனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டதாக கூறினார்.

மேலும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகன ஓட்டிகள் பெரும்பாலும் 18-30 வயதிலான இளைஞர்கள் ஆவர். விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் பெற்றோர்கள் பொறுப்பற்ற முறையில் தங்கள் குழந்தைகள் சட்டத்திற்கு புறம்பாக கார்களில் என்ஜின் பவரை மாற்ற பணம் வழங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

சாலை பயன்படுத்துபவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த ஒரு விதி மீறல்களையும் துபாய் காவல்துறை பொறுத்துக்கொள்ளாது. சமூகத்தைப் பாதுகாப்பதில் பொதுமக்களும் போலீசிற்கு ஒத்துழைக்கலாம். 901 என்ற எண்ணை அழைப்பதன் மீறல்களைப் புகாரளிக்கலாம் என்று அழைப்பு விடுத்தார்.

சட்டம் சொல்வது என்ன.?

சட்டத்தின்படி அங்கீகாரமின்றி ஒரு வாகனத்தின் அடிப்படை அல்லது இயந்திரங்களில் மாற்றங்கள் செய்தால் அதற்கு 1,000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 12 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும். மேலும், வாகனம் 30 நாட்களுக்கு சிறை வைக்கப்படும். வழக்கைப் பொறுத்து இந்த அபராதங்கள் தீவிரப்படுத்தப்படலாம்.