UAE Tamil Web

“ஆங்காங்கே தொடுகிறார்; முத்தம் கொடுக்கிறார்” – இமாம் மீது வழக்குத்தொடுத்த 11 வயது சிறுமி – சிசிடிவி கேமராவால் முடிவிற்கு வந்த வழக்கு..!..!

SexualHarassment-620x400

துபாயைச் சேர்ந்த ஏமிராட்டி குடும்பம் ஒன்று தங்களது 11 வயது மகள் மற்றும் 3 மகன்களுக்கு குரான் சொல்லிக்கொடுக்க ஆசியாவைப் பூர்வீகமாகக்கொண்ட மசூதியில் இமாமாக இருக்கும் நபரை நியமித்திருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வகுப்பை ஆரம்பித்த இமாம், 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் முத்தம் கொடுத்ததாகவும் அவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் மதிய வேளையில் பயிற்சிக்காக வீட்டிற்குச் செல்லும் இமாம், வீட்டின் ஹாலில் வைத்து சிறுமி மற்றும் அவளது 3 சகோதரர்களுக்கு குரான் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.

சகோதர்கள் பார்க்காதபோது அவர் தன்னிடம் அத்துமீறியதாக சிறுமி தாயாரிடம் தெரிவித்திருக்கிறார். இரண்டு வருடங்களாக குரான் வகுப்பு நடைபெற்றாலும் கடந்த செப்டம்பர் மாதம் தான் சிறுமி தனது அம்மாவிடம் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார். கூச்சம் மற்றும் அச்சம் காரணமாக தவிர்த்து வந்ததாகவும் தன்னால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை என்பதால் தற்போது தெரிவித்ததாகவும் சிறுமி தெரிவித்திருக்கிறார்.

அந்த வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் கடந்த ஒரு மாதத்திற்கான வீடியோக்கள் மட்டுமே அதில் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் இமாம் அத்துமீறியதற்கான தடயங்கள் இல்லை. தனது 14 வயது மகனிடம் இமாமின் நடவடிக்கை பற்றிக் கவனிக்குமாறும் தவறுதலாக நடந்துகொண்டால் உடனடியாக தெரிவிக்குமாறும் அந்தத் தாய் தெரிவித்திருக்கிறார். அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை என அச்சிறுவனும் தெரிவித்திருக்கிறான்.

சிறுமியை துபாய் தடய அறிவியல் நிபுணர்கள் சோதித்ததில் அவளிடம் இமாம் அத்துமீறியதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் சிறுமி முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, தன்னிடம் அத்துமீறியதாக சிறுமி குறிப்பிட்ட நாள் முதல் அந்த மாதம் முழுமைக்கான சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் அதில் இமாம் தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. வகுப்புகள் நடைபெற்ற பகுதி முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், மூன்று சகோதர்களின் முன்னிலையில் அவர்களுக்குத் தெரியாமல் இத்தகைய காரியத்தில் அவர் (இமாம்) ஈடுபடுவார் என்பது ஏற்கமுடியாத வாதம் என நீதிபதி குறிப்பிட்டதோடு, போதிய ஆதாரங்கள் இல்லாததால் இமாமை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

SexualHarassment-620x400
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap