UAE Tamil Web

துபாய்: ஏலத்திற்கு வரும் மிகவும் அரியவகை 242 கேரட் வைரம் – விலை என்ன தெரியுமா?

242-carat egg-sized diamond

ரஷியாவைச் சேர்ந்த மாநில அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் அல்ரோஸா சுரங்கம், இந்த நூற்றாண்டில் கிடைத்த மிகப்பெரிய வைரக்கல்லினை மார்ச் 22 ஆம் தேதி துபாயில் ஏலத்திற்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. 242 கேரட் கொண்ட இந்த சுத்தமான வைரம் (rough diamond) பார்ப்பதற்கு சிறிய முட்டை போலவே காட்சியளிக்கிறது.

ஒரு நிமிடம்..அடுத்த பாராவிற்கு செல்வதற்கு முன்பு, சுத்தமான வைரம் என்பது என்ன? எனத் தெரிந்துகொள்வோம். ஆங்கிலத்தில் ரஃப் டையமண்ட் என்பது வெட்டுதலுக்கோ, வேறு வகையான பாலிஷ் செய்வதற்கோ தன்னை அனுமதிக்காத அரியவகை வைரமாகும். இதன் காரணமாகவோ என்னவோ அதனை ரஃப் டையமண்ட் என்று அழைக்கிறார்கள்.

உலகில் இம்மாதிரியான வைரங்களை மிகப்பெரிய அளவில் விற்பது அல்ரோஸாவும் ஆங்கிலோ – அமெரிக்க நிறுவனமான டீ பீர்ஸ் (De Beers) -ம் தான்.

“100 கேரட்டுகளுக்கு மேற்பட்ட ரஃப் டையமண்ட்கள் தங்களை வெட்டவோ, பாலிஷ் செய்யவோ அனுமதிப்பது இயற்கையிலேயே மிகவும் அதிசயமான ஒன்றாகும். மிகவும் அரிதாகத்தான் இம்மாதிரியான வைரங்கள் கிடைக்கும்” என அல்ரோஸா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு தலைவர் எவ்ஜெனி அகுரீவ் (Evgeny Agureev) தெரிவித்தார்.

அல்ரோஸா நிறுவனம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட இதே அளவுள்ள ரஃப் வைரத்தை ஏலத்தில் விட்டது. ரஷிய சட்டத்திட்டத்தின் அடிப்படையில் 50 கேரட்டுகளுக்கு மேலுள்ள ரஃப் வைரங்கள் கோக்ரான் மாநில களஞ்சியத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்ரோஸா நிறுவனத்தின் 100 வது ஏலத்தைக் குறிக்கும் விதமாக இந்த அரிய வைரம் பல நாட்கள் கழித்து வெளியுலகத்திற்கு வருகிறது. இதனை வாங்க பெரும்புள்ளிகளிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அழகிய வைர முட்டையின் துவக்க விலை 20 லட்சம் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

242-carat egg-sized diamond
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap