fbpx
19.3 C
Dubai
November 25, 2020
UAE Tamil Web

துபாயில் பிரம்மாண்ட சைக்கிள் பேரணி : முக்கிய சாலைகளை மூடுவதாக RTA அறிவிப்பு – மாற்று வழிகள் எவை?

Dubai Ride

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை பிரம்மாண்ட சைக்கிள் பேரணி துபாயில் நடைபெற இருக்கிறது. 4 முதல் 11 கிலோமீட்டர் வரையிலும் நீடிக்கும் இந்த பேரணியில் குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் என அனைவரும் கலந்துகொள்ளலாம்.

பேரணி நடைபெறுவதையொட்டி சில போக்குவரத்து வழிமுறைகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டிருக்கிறது. நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரையில் கீழ்க்கண்ட சாலைகள் மூடப்படுவதாக RTA தெரிவித்திருக்கிறது.

ஷேக் சயீத் சாலை மூடப்படுகிறது. அதற்குப் பதிலாக மக்கள் அல் கைல் சாலையைப் பயன்படுத்தலாம்.

லோவர் பைனான்ஷியல் செண்டர் சாலை (Lower Financial Centre Road) மூடப்படுகிறது. அதற்குப் பதிலாக மக்கள் அப்பர் பைனான்ஷியல் செண்டர் (Upper Financial Centre Road) சாலையைப் பயன்படுத்தலாம்.

மரங்கள் அடர்ந்த ஷேக் முகமது பின் ரஷீத் சாலை மூடப்படுகிறது. மக்கள் அதற்குப் பதிலாக புர்ஜ் கலீஃபா சாலையைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பார்க்கிங் இடங்கள்

இந்த பேரணியில் கலந்துகொள்பவர்களுக்கான பார்க்கிங் இடங்களையும் RTA அறிவித்திருக்கிறது.

அப்பர் பைனான்ஷியல் செண்டர் சாலை வழியாகச் சென்று துபாய் மால் மற்றும் சபீல் பார்க்கிங் பகுதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அல் முஷ்டாக்பால் மற்றும் சபீல் 2 வீதிகள் வழியாக துபாய் உலக வர்த்தக மையத்திலும் மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

நாளை நவம்பர் 20 ஆம் தேதி ஷேக் சயீத் சாலையில் நடைபெறும் இந்த சைக்கிள் பேரணியில் பங்கேற்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வித்தியாசமான அனுபவத்தைப் பெற முடியும்.

4 மற்றும் 11 கிலோமீட்டர் என இரு முறைமைகளில் இந்த பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பின்பற்றவேண்டிய போக்குவரத்து வழிமுறைகளை வெளியிட்டிருப்பதாக RTA தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

 



error: Alert: Content is protected !!