UAE Tamil Web

துபாய் வாசிகளே.. தள்ளுபடி மற்றும் மலிவு விலையில் விற்கப்படும் பொருட்கள் நாம் பயன்படுத்த பாதுகாப்பானவையா.? எப்படி கண்டுபிடிப்பது.!! எளிய வழி இதோ..

shop

துபாய் முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட ரீடெய்ல் கடைகள் உள்ளன. இவற்றில் சோப்புகள், அழகுசாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் டூத்பேஸ்ட் போன்ற பல நுகர்வு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றுக்கு மத்தியில் துபாயில் தள்ளுபடியில் பொருட்களை விற்பதற்கென்றே சில கடைகள் உள்ளன. இந்த கடைகள் பரந்த அளவிலான தயாரிப்புகளை 5 திர்ஹம்ஸிற்கும் குறைவாக விற்கின்றன. இவை 1 திர்ஹம் முதல் 10 திர்ஹம் கடைகள் என பிரபலமாக அறியப்படுகின்றன. இங்கு பரிசு பொருட்கள், உடைகள் மற்றும் பிற நுகர்வு பொருட்கள் மலிவு விலையில் விற்கப்படுகினறன.

1

இப்படி தள்ளுபடியிலும், மலிவு விலையிலும் கிடைக்கும் பொருட்கள் நாம் பயன்படுத்த பாதுகாப்பானவை தானா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது.? இந்த கேள்விக்கு துபாய் நகராட்சியின் உயரதிகாரி ஒருவர் பதில் அளித்துள்ளார்.

துபாய் நகராட்சியின் சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை இயக்குநரான டாக்டர் நசீம் முகமது ரஃபி இதுபற்றி கூறுகையில் அங்கீகரிக்கப்பட்ட வகைப்பாடுகளின்படி வாசனை திரவியங்கள், டிடெர்ஜெண்ட்கள், கிருமிநாசினிகள், ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ், அழகுசாதன பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்க்குகள் போன்ற பல நுகர்வோர் தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த துபாய் நகராட்சி ஒரு ஸ்மார்ட் ஆப்பை மக்களுக்கு வழங்கியுள்ளது.

2

அதன்படி குடியிருப்பாளர்கள் மொன்டாஜி(Montaji) என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், மொன்டாஜி ஆப்பின் தரவுத்தளத்தில்(database) 250,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர் தயாரிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இது தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை அறிய உதவுகிறது. மேலும் பதிவுசெய்யப்பட்ட மற்றும் அசல் பொருட்களை குடியிருப்பாளர்கள் வாங்குவதை உறுதிசெய்கிறது.

மக்கள் மொன்டாஜி ஆப் பயன்படுத்தி அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், ஹெல்த் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் டிடெர்ஜெண்ட் போன்ற எந்தவொரு நுகர்வோர் தயாரிப்புகளையும், தயாரிப்பு பார்கோட் அல்லது பெயரை பயன்படுத்தி தேடி, அந்த தயாரிப்புகள் நகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள தயாரிப்புகள் தானா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளலாம்.

தாங்கள் தேடும் தயாரிப்புகள் பதிவு செய்யப்படாதது என்பதை நுகர்வோர் கண்டால், அவர்கள் அந்த ஆப்பின் மூலமே நகராட்சிக்கு உடனடியாக புகாரளிக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

shop
0 Shares
Share via
Copy link