21.7 C
Dubai
October 30, 2020
UAE Tamil Web

துபாய் ஷாப்பிங் திருவிழா(DSF 2020) நடைபெறும் தேதிகள் அறிவிப்பு.! அமீரகவாசிகள் குதூகலம்..

DSF

அமீரகத்தில் மிகவும் பிரபலமான வருடாந்திர ரீடெய்ல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சியான, துபாய் ஷாப்பிங் திருவிழாவின்(Dubai Shopping Festival) 26-ம் பதிப்பு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17, 2020 முதல் ஜனவரி 30, 2021 வரை 6 வாரங்களுக்கு மேல் நடைபெற உள்ள இந்த திருவிழாவானது குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உலக புகழ்பெற்ற இசை நட்சத்திரங்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள், தனித்துவ சந்தைகள், மேடை நிகழ்ச்சிகள், சூப்பர் சேல், தவறவிட முடியாத ப்ரமோஷன்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள வாழ்க்கையை மாற்றும் பரிசுகளை வெல்லும் வாய்ப்புகள், பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள், உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது.

மேலும் புத்தாண்டு தினத்தன்றும் மற்றும் 2021-க்குள்ளும் கூடுதல் சிறப்பு கொண்டாட்டங்களும் இந்த ஷாப்பிங் திருவிழாவின் போது நடைபெறும். துபாய் திருவிழாக்கள் மற்றும் ரீடெய்ல் ஸ்தாபனம் (Dubai Festivals and Retail Establishment) ஏற்பாட்டில் நடைபெறும் DSF, இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கப்படுகிறது.

எனவே குடும்பங்கள், தம்பதிகள் மற்றும் நண்பர்கள் பள்ளி விடுமுறைகளை அதிகம் பயன்படுத்தலாம். துபாயில் டிசம்பர் 26 முதல் பண்டிகை காலம் மற்றும் ஆண்டு விற்பனையின் முடிவு சீசன் துவங்குவது குறிப்பிடத்தக்கது. துபாய் ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கும் அனைத்து மால்கள் மற்றும் நிகழ்விடங்களிலும் கோவிட் -19 பரவாமல் தடுக்க கடுமையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.

துபாய் ஷாப்பிங் திருவிழாவை முக்கிய ஸ்பான்சரான ராக்பேங்க்(RAKBANK) மாஸ்டர்கார்ட் ஆதரிக்கிறது. இது தவிர அல் ஃபுட்டாய்ம் குரூப்(துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் & ஃபெஸ்டிவல் பிளாசா), அல் ஸ்ரூனி குரூப்(மெர்காட்டோ ஷாப்பிங் மால்), ஏ.டபிள்யூ ரோஸ்டாமணி குரூப், எம்மார், எமிரேட்ஸ் ஏர்லைன், எனாக்(Enoc), எதிசலாட், மஜித் அல் ஃபுட்டாய்ம் (மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் தேரா), மெராஸ்-Meraas( (சிட்டி வாக், பாக்ஸ்பார்க், தி பீச், தி அவுட்லெட் வில்லேஜ், அல் சீஃப், லா மெர்), நக்ஹீல் மால்ஸ்(ஐபிஎன் பட்டுடா மால் மால், தி பாயிண்ட், நக்ஹீல் மால், டிராகன் மார்ட் 2) உள்ளிட்ட பங்குதாரர்களும் ஆதரிக்கின்றனர்.



error: Alert: Content is protected !!