21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

கோவிட் -19 விதி மீறல்: 45 நாட்களில் 25 உணவு நிறுவனங்கள் மூடல்.! துபாய் நகராட்சி அதிரடி

shops

கோவிட் -19 தொற்றுக்கு எதிரான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் நடுப்பகுதி வரை 10,141 உணவு நிறுவனங்களில் துபாய் நகராட்சி குழுக்கள் முழு பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.

இந்த 45 நாட்களில் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்திற்காக 25 உணவு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவற்றை மூடியும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.1,579 பேருக்கு விதிகளை பின்பற்ற கூறி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

8,404 உணவு நிறுவனங்கள் சுகாதார அதிகாரிகள் நிர்ணயித்த நடைமுறைகளை முறையாக கடைபிடிப்பது இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் துபாயில் உள்ள உணவு நிறுவனங்கள், சமீப நாட்களாக கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள, நகராட்சி நிர்ணயித்த நடைமுறைகள் மற்றும் தேவைகளை கடைப்பிடிப்பதில் பெரும் அர்ப்பணிப்பை காட்டுவதாக நகராட்சியின் உணவு ஆய்வு பிரிவு இயக்குனர் சுல்தான் அல் தாஹிர் கூறியுள்ளார். நகராட்சி ஆய்வாளர்கள் தினசரி செய்யும் பிரச்சாரங்கள் மற்றும் ஆய்வு வருகைகள் அதிகரிப்பே இதற்கு காரணம் என்று அவர் கூறினார்.

விதிகளை மீறிய பெரும்பாலான உணவு நிறுவனங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை, உணவு தயாரிப்பின் போது முககவசங்கள் மற்றும் கையுறைகளை அணிவதையும் அமல்படுத்தவில்லை. அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி பொருட்களைப் பயன்படுத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார். இவை ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட மிக முக்கியமான மீறல்கள் என்றார்.

உணவு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் உடல்நலம் குறித்த தினசரி பின்தொடர்தல் பதிவுகள், சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி நடவடிக்கைகளின் பதிவுகள், பிற உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக உள்ளனவா என்றும் நகராட்சி ஆய்வுக் குழுக்கள் சரிபார்க்கின்றன என்றும் அதிகாரி அல் தாஹிர் குறிப்பிட்டார்.



error: Alert: Content is protected !!