UAE Tamil Web

புக் செய்த 3 நிமிடத்தில் டாக்சி வரவில்லை என்றால் 3000 திர்ஹம்ஸ் பரிசு – சவால் விடும் துபாய் டாக்ஸி..!

Hala Taxi

உலகின் மிகவும் பிஸியான நகரமான துபாயில் உடனடியாக டாக்சி கிடைக்குமா? என உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களை சவாலுக்கு அழைக்கிறது ஹாலா (துபாய் டாக்சி).

- Advertisment -

நீங்கள் புக் செய்த 3 வது நிமிடத்தில் உங்களுக்கு டாக்சி கிடைக்கவில்லை எனில் 3000 திர்ஹம்ஸ் வெல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். உண்மைதான்.

“3 நிமிட வருகை நேரம்” என்ற இத்திட்டத்தின் மூலமாக, டாக்சிக்களுக்கான அதிக தேவை இருக்கும் இடங்களைக் கண்டறியமுடியும். டாக்சி ஓட்டுனர்கள் ஆப் வழியாகவே வாடிக்கையாளர்களை எளிதில் கண்டடைய முடியும். மேலும், 3 நிமிடங்களில் வாடிக்கையாளர்களை அணுகலாம் என ஹாலா நிர்வாகம் உறுதியாக நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் டாக்சியை புக் செய்து 3 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருக்க நேர்ந்தால் கரீம் கிரெடிட் (Careem credit) மூலமாக 3000 திர்ஹம்ஸ் பெறுவதற்கான ராஃபில் டிராவிற்குள் நீங்கள் நுழைவீர்கள். ஆனால் அதனை அத்தனை எளிதில் ஹாலா விட்டுத்தராது என அறைகூவல் விடுத்திருக்கிறது அந்நிர்வாகம்.

 

View this post on Instagram

 

A post shared by Hala (@hala_ride)