UAE Tamil Web

துபாயில் திறக்கப்படும் புதிய ஷாப்பிங் மால் – எங்கே? எப்போது?

Dubai new shopping mall

துபாய்: புர்ஜ் அல் அரப்-க்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேயான் மால் அடுத்தமாதம் திறக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மேல் தளங்களும், கார் பார்க்கிங்காக இரண்டு பேஸ்மென்ட் தளமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. இங்கே 70 கார்கள் வரை நிறுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு அளவுகளில் கட்டப்பட்ட 44 கடைகள் இங்கு உள்ளன. வாடகைதாரர்கள் இந்த கடைகளின் உட்கட்டமைப்பு மற்றும் அலங்கார பணிகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் இந்த மால் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய அல் வாலித் முதலீட்டுக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் மேயான் மாலினை கட்டிவருபவருமான முகமது அப்துல் ரசாக் அல் முதாவா,” உலகமே பெருநோயின் தாக்கத்தில் சிக்கித்தவிக்கும் வேளையில் சாதனைகள், வெற்றி மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்றவற்றில் அமீரகம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது”

“அமீரகத்தில் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு விதிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் கொரோனா தடுப்பூசி வழங்குவதிலும் நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டுள்ளோம். கொரோனா தொற்றிலிருந்து வெளியேறும் முதல் நாடாகவும் மொத்த மக்கட்தொகைக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் முதல் நாடாகவும் அமீரகம் இருக்கும் எனவும் முதற்கட்ட ஆய்வுமுடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது எங்களுடைய பொருளாதார நடவடிக்கைகளில் நிச்சயம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என்றார்.

Dubai new shopping mall
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap