UAE Tamil Web

துபாய்: டூரிஸ்ட்டுகளுக்காக ஸ்பெஷல் மொபைல் App அறிமுகம்.. ஏராளமான சிறப்பு தள்ளுபடிகளை அனுபவிக்கலாம் என அறிவிப்பு.! எப்படி பயன்படுத்துவது.?

dubai

துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி மொபைல் App மூலம் சிறப்பு தள்ளுபடிகளை அனுபவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

இந்த புதிய அறிவிப்பின் மூலம் துபாய் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சிறப்பு ஸ்மார்ட் கார்டை மொபைல்களில் டவுன்லோட் செய்து சலுகைகளை பெறலாம். இதன் மூலம் கடைகள், உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களில் ஏராளமான சிறப்பு தள்ளுபடிகளை பெற்று மகிழலாம்.

துபாயிலுள்ள வசிப்பிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அல் சாதா டூரிஸ்ட் ஸ்மார்ட் கார்டு (Al Saada Tourist Smart Card) ஒரு இலவச App ஆகும். துபாயில் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தங்களது ஸ்மார்ட்போன்களில் இந்த App-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

துபாய் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்பு தள்ளுபடிகளை அனுபவிக்க, பாஸ்போர்ட் கன்ட்ரோல் கவுன்ட்டரை அடைந்ததும் பார்கோடை ஸ்கேன் செய்து கொள்வதன் மூலம் தங்கள் மொபைல்களில் இந்த App-ஐ டவுன்லோட் செய்யலாம்.

பின் சுற்றுலா பயணிகள் தள்ளுபடிகளை பெற தங்களது பாஸ்போர்ட் எண், வருகை தேதி ஆகியவற்றை என்டர் செய்து ஸ்மார்ட் தள்ளுபடி கார்டை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். தள்ளுபடி கிடைக்கும் அனைத்து கடைகளின் இருப்பிடங்களை சுற்றுலாப்பயணிகள் தெரிந்து கொள்ள இந்த App-ல் ஒரு மேப் உள்ளது குறிப்பிடத்தக்கது

துபாய் பொருளாதார மேம்பாட்டுத் துறையின் இயக்குநர் ஜெனரல் சமி அல் காம்ஸி மற்றும் GDRFA துபாய் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் முகமது அல் மர்ரி ஆகியோர் GITEX தொழில்நுட்ப வாரம் 2020-ல் இந்த புதிய திட்டத்தை துவக்கி வைத்தனர்.