துபாயின் அல் ஹாதிகா சாலையில் நகராட்சியின் நீர்ப்பாசனக் குழாயில் கசிவு ஏற்பட்டதால் சாலைகளில் நீர் பெருக்கெடுக்கத் துவங்கியது. இதனையடுத்து வாகனவோட்டிகள் வேறுபாதையில் செல்லுமாறு துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Al Hadiqa Street has been closed from its intersection with Sheikh Zayed Road until its intersection with Al Wasl Street heading to Al Wasl Street, due to a break in Dubai Municipality’s irrigation pipeline.
— RTA (@rta_dubai) December 26, 2020
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,” ஷேக் சயீத் சாலையின் அல் ஹதிகா சாலை குறுக்குவழி சந்திப்பில் இருந்து அல் வாஸில் சாலை வரையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது”
We advise drivers to use alternative streets: Al Manara and Umm Al Sheif streets, for those coming from Abu Dhabi and Jebel Ali, and Al Safa and Umm Amara Streets, for those coming from Trade Centre St.
— RTA (@rta_dubai) December 26, 2020
“வாகனவோட்டிகள் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அபுதாபி மற்றும் ஜெபல் அலியிலிருந்து வருபவர்கள்; அல் மனாரா மற்றும் உம் அல் ஷெரிப் வீதிகளைப் பயன்படுத்திக்கொள்ளவும். வர்த்தக மைய சாலையில் இருந்து வருபவர்கள் அல் சஃபா மற்றும் உல் அல் அமாரா வீதிகளைப் பயன்படுத்திக்கொள்ளவும்” என RTA குறிப்பிட்டுள்ளது.