UAE Tamil Web

துபாய்: ஜெட் ஸ்கைகளை ஏற்றிச்சென்ற வாகனம் கடலில் மூழ்கியது..!

jet skis slip

துபாயில் உள்ள உம் சகேம் துறைமுகத்தில் இன்று ஜெட் ஸ்கைகளை ஏற்றிச் சென்ற வாகனம் கடலுக்குள் மூழ்கியதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

துபாய் காவல்துறை அளித்த தகவலின்படி, 3 ஆம் எண் மீன்பிடி துறைமுகத்தில் ஜெட் ஸ்கைகளை ஏற்றிச் சென்ற வாகனம் நீருக்குள் சென்றுவிட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை.

துபாய் காவல்துறையின் கடற்பகுதி மீட்புப் படையின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அலி அல் நக்பி இதுகுறித்துப் பேசுகையில்,” வாகனம், அதனுடன் இணைக்கப்பட்ட ட்ரைலர் மற்றும் ஜெட் ஸ்கைகளை மீட்கும் பணியில் சிறப்பு பணிக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டது” என்றார்.

வழுக்கும் பகுதிகளில் ஜெட் ஸ்கைகளை இறக்கும்போது மக்கள் கவனமாக செயல்படவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

jet skis slip
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap