UAE Tamil Web

துபாயில் இந்த 2 முக்கிய சாலைகளையும் மூடியது போக்குவரத்து ஆணையம் – வாகனவோட்டிகள் வேறுவழிகளில் செல்ல அறிவுறுத்தல்..!

Al Shindagha Tunnel

துபாயின் பிசினஸ் பே கிராஸிங் மேம்பாலம் (Business Bay Crossing Bridge) 30 மணி நேரங்களுக்கு மூடப்படுவதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருக்கிறது.

- Advertisment -

புர் துபாயையும் தேராவையும் இணைக்கும் இந்த மேம்பாலம் இன்று இரவு (நவம்பர் 27 , வெள்ளிக்கிழமை) 12 மணிமுதல் நாளை (நவம்பர் 28, சனிக்கிழமை) காலை 6 மணிவரையிலும் மூடப்படும் என நேற்று RTA நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனவோட்டிகள் கார்ஹூட் மேம்பாலம், அல் மக்தூம் மேம்பாலம் மற்றும் ராஸ் அல் கோர் சாலையைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை

துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை நாளை (நவம்பர் 28) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும் மூடப்படும் என துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்துள்ளது. தேராவை, புர் துபாயுடன் இணைக்கும் இந்த சுரங்கப்பாதை இன்று காலை 12.30 (AM) முதல் காலை 10.30 மணி வரையிலும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகவே வாகனவோட்டிகள், அல் மக்தூம் மேம்பாலம் (Al Maktoum Bridge) மற்றும் கார்ஹூட் மேம்பாலம் (Garhoud bridge) ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு போக்குவரத்து ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தட பேருந்துகளின் இயக்கம் தாமதமாகலாம் என போக்குவரத்து ஆணையம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

X13, X02, 8, 95, C01, C03, C07, C09, C18, E306 மற்றும் X23 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கம் இதனால் தாமதமடையலாம்.