துபாயின் பிசினஸ் பே கிராஸிங் மேம்பாலம் (Business Bay Crossing Bridge) 30 மணி நேரங்களுக்கு மூடப்படுவதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருக்கிறது.
புர் துபாயையும் தேராவையும் இணைக்கும் இந்த மேம்பாலம் இன்று இரவு (நவம்பர் 20 , வெள்ளிக்கிழமை) 12 மணிமுதல் நாளை (நவம்பர் 21, சனிக்கிழமை) காலை 6 மணிவரையிலும் மூடப்படும் என நேற்று RTA நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனவோட்டிகள் கார்ஹூட் மேம்பாலம், அல் மக்தூம் மேம்பாலம் மற்றும் ராஸ் அல் கோர் சாலையைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.