UAE Tamil Web

துபாய் மால்களில் அமைக்கப்பட்டுள்ள PCR பரிசோதனை மையங்கள் செயல்படும் நேரங்களில் மாற்றம்..

dubai

துபாயில் உள்ள மால்களில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிட் -19 பரிசோதனை நிலையங்களை, பயன்படுத்த விரும்புவோர் இனி நேரடியாக வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று துபாய் சுகாதார ஆணையம்(DHA) அறிவித்துள்ளது.

- Advertisment -

அதே போல துபாய் மால்களில் உள்ள பரிசோதனை மையங்கள் செயல்படும் நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள துபாய் சுகாதார ஆணையம், மால் ஆஃப் தி எமிரேட்ஸ்(Mall of the Emirates), சிட்டி சென்டர் மிர்டிஃப்(City Centre Mirdif), சிட்டி சென்டர் தேரா(City Centre Deira) ஆகிய மால்களில் உள்ள பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் ஞாயிறு முதல் புதன் வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், வியாழன் முதல் சனி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்கண்ட மால்களில் உள்ள பரிசோதனை நிலையங்களை பயன்படுத்த விரும்பிய வாடிக்கையாளர்கள், பி.சி.ஆர் சோதனைக்கு வருவதற்கு முன்பு அப்பாயின்மென்ட்களை பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் தற்போதைய புதிய அறிவிப்பால் அப்பாயின்மென்ட் ஏதும் இல்லாமல் நேரடியாக சென்று சோதனை செய்து கொள்ளலாம்.

காய்ச்சல், இருமல் அல்லது கோவிட்-19அறிகுறிகள் உள்ளவர்கள் மால்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பரிசோதனை செய்து கொள்ள கூடாது. ஏனெனில் குறிப்பாக பயணம் மற்றும் பிற மருத்துவ நோக்கங்களுக்காக பி.சி.ஆர் சோதனை முடிவு தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த சேவை என்று DHA நினைவூட்டியுள்ளது.

துபாய் மால்களில் அமைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் சோதனை நிலையங்கள் நாளொன்றுக்கு 180 சோதனைகளை நடத்தும் திறன் கொண்டது. 150 திர்ஹம்ஸ் கட்டணத்தில் எடுக்கப்படும் சோதனையின் முடிவுகள், 24 மணி நேரத்திற்குள் உரியவர்களுக்கு அனுப்பப்படுகிறது. தொற்றை எதிர்த்து போராடுவதற்கான DHA -வின் முன்கூட்டிய மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, துபாய் மால்களில் கொரோன பரிசோதனை மையங்கள் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.