UAE Tamil Web

துபாய்: ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்தை இலவசமாகப் பெற முன்பதிவு செய்வது எப்படி? யாருக்கெல்லாம் முன்னுரிமை?

Corona injection

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரத்திலிருந்து நேற்று இரவு எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ விமானம் மூலமாக ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து துபாய் வந்தடைந்தது.

இதனையடுத்து தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உச்ச சபை இன்று முதல் இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவங்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலவசமாக இந்த கொரோனா மருந்தினைப் பெறுவது எப்படி எனப் பார்க்கலாம்.

800342 என்ற ஹாட்லைன்க்கு கால் செய்தோமானால் இந்த கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் தற்போதைய பகுதியில் வயதானவர்கள், செல்லுபடியாகும் துபாயில் வழங்கப்பட்ட குடியிருப்பு விசாவை வைத்திருப்பவர்கள், நீண்டநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதை விளங்குகிறது.

துபாய் சுகாதார ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இந்த தடுப்பூசித் திட்டத்தில் முன்பதிவு செய்ய குடியிருப்பாளர்கள் மெடிக்கல் ரெக்கார்ட் நம்பரை (MRN)  வழங்கவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

மெடிக்கல் ரெக்கார்ட் நம்பர் இல்லாதவர்கள் info@dha.gov.ae என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்களது எமிரேட்ஸ் ஐடியின் இரண்டு பக்கங்கள் (முன் மற்றும் பின்) மற்றும் மொபைல் எண்ணினை உள்ளீடு செய்து முன்பதிவு செய்யவேண்டும் என அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

தற்போது கிடைத்த தகவலின்படி துபாயில் நான்கு இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிகிறது. அந்த இடங்கள்: ஸபீல், அல் பர்ஷா, நாத் அல் ஹம்மார், அல் மம்சார்.

சீனாவின் சினோஃபார்ம் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட ஆராய்ச்சிகள் அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இது 86 சதவிகித ஆற்றலைக் கொண்டிருக்கும் என்றாலும் புதிய ஃபைசர் மருந்தின் ஆற்றல் 95 சதவிகிதமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு 2 டோஸ்கள் ஃபைசர் மருந்தானது செலுத்தப்பட்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

Corona injection
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap