UAE Tamil Web

அதிகளவு மின் உற்பத்தி: கின்னஸ் சாதனை படைத்த துபாய்..!

DEWA-Guinness-World-Record_

துபாய்: ஜெபல் அலி மின் உற்பத்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் (DEWA), உலகிலேயே அதிகளவு மின் உற்பத்தி செய்யும் ஒரே இடம் என கின்னஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துபாய் மின்சார மற்றும் நீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த நிலையத்தில் 9,547 MW மின்சாரமானது உருவாக்கப்பட்டுவருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெபல் அலியின் M-ஸ்டேஷன் விரிவாக்கப்பணிகள் முடிவடைந்தன. இதன்மூலம் அமீரகத்தின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு செய்யும் நிலையமாக இது உயர்ந்தது. விரிவாக்கப் பணிகளுடன் சேர்த்து M-ஸ்டேஷனின் மொத்த மதிப்பு 12 பில்லியன் திர்ஹம்ஸ் ஆகும். இந்த ஸ்டேஷன் மூலமாக 2,885 மெகாவாட் மின்சாரமும், 140 மில்லியன் காலன் நீர் சுத்திகரிப்பும் செய்யப்படுகிறது.

“2030 ஆம் ஆண்டுவரையில் மின் உற்பத்திக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில், மின்சார உற்பத்தி உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை DEWA வகுத்துள்ளது. இது கூடுதல் மின்சார உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் பகிர்மான வலையமைப்புகள் ஆகியவற்றை அத்தியாவசியமாக்குகின்றன. இதன்மூலம் நாங்கள் தரமான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கும்படியான, நம்பகத்தன்மை மிகுந்த மற்றும் அதிக திறனுள்ள சேவைகளை 10 லட்சம் பேருக்கு வழங்க முடியும்” என DEWA வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சயீத் முகமது அல் தயேர் தெரிவித்தார்.

துபாய் மற்றும் DEWA ஆகியவை இணைந்து சில சாதனைகளை சமீபத்தில் நிகழ்த்திக்காட்டியுள்ளன. அவையாவன, உலகிலேயே மிகக் குறைவான வாடிக்கையாளர் நேர இழப்பு (CML) வருடத்திற்கு 1.66 நிமிடங்களாக இருக்கிறது. மின் கடத்தல் மற்றும் பகிர்மான வலையமைப்புகளில் ஏற்படும் இழப்புகளில் (3.3%) மிகக்குறைந்த இடங்களில் துபாயும் ஒன்று. நீர் பகிர்மான வலையமைப்புகளில் மிகக்குறைந்த இழப்பு (5.1%), DEWA மின்சார நிலையங்களில் எரிபொருள் வெப்ப பயன்பாடு மிக அதிகம் (90%).

DEWA-Guinness-World-Record_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap