UAE Tamil Web

ஊனமுற்ற, பணக் கஷ்டத்தில் தவிக்கும் ஊழியர்களுக்கு உதவிசெய்ய 11.5 லட்சம் திர்ஹம்ஸ் வழங்கிய துபாய் போக்குவரத்து ஆணையம்..!

RTA_50_years

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கடந்த 2017 ஆம் ஆண்டு மனிதநேய அடிப்படையில் உதவிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஜிஸ்ர் அல் கைர் (Jisr Al Khair) என்னும் திட்டத்தை துவங்கியது. அதன்படி ஊனமுற்ற, தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட, அதிகளவு வாடகை பாக்கி வைத்திருப்பவர்கள், பள்ளிக் கட்டணங்களை செலுத்த முடியாதவர்கள் என 100 RTA ஊழியர்களின் பொருளாதார உதவிகளுக்காக 11.5 லட்சம் திர்ஹம்ஸ் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய RTA பவுண்டேசனின் உச்ச கமிட்டித் தலைவரும் துபாய் டாக்சி கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியுமான யூசஃப் அல் அலி,” அறக்கட்டளையின் ஜிஸ்ர் அல் கைர் திட்டம் மூலமாக 100 தொழிலாளர்களுக்கு உதவியது RTA தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையேயான பிணைப்பை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது”

“முழுவதும் அல்லது பகுதி ஊனமுற்றவர்கள், நெடுநாள் பிணிகளைக் கொண்டிருப்போர், அதிகமான வாடகை பாக்கி வைத்திருப்போர், பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாதோர் போன்றவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பெய்ட் அல் கைர் (Beit Al Khair) சமூக நிபந்தனைகளுக்கு உட்பட்டு உதவிபெற தகுதி உடைய நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உச்ச கமிட்டியால் இறுதி பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டது” என்றார்.

150,000 திர்ஹம்ஸ் அளித்த ஊழியர்கள்

RTA பணியாளர்கள் தங்களுடைய சக ஊழியர்களின் நல் வாழ்விற்காக 150000 திர்ஹம்ஸ் தொகையை வழங்கியிருக்கிறார்கள். இதுகுறித்து அலி பேசுகையில்,” தொழிலாளர்களின் இந்த செயலானது மறைந்த ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானின் மனிதாபிமான மற்றும் தொண்டு மரபுக்கு ஒத்ததாகும்” எனக் குறிப்பிட்டார்.

RTA பவுண்டேஷன் 1 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையையும் RTA ஊழியர்கள் 150000 திர்ஹம்ஸ் தொகையையும் வழங்கி கஷ்டப்படும் ஊழியர்களின் முகத்தில் புன்னகையை பூக்கச் செய்திருக்கிறார்கள்.

RTA_50_years
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap