UAE Tamil Web

துபாய்: 30 மணி நேரங்களுக்கு மூடப்பட்ட பிசினஸ் பே மேம்பாலம் – RTA வெளியிட்ட அறிவிப்பு..!

Business Bay Crossing

துபாயின் பிசினஸ் பே கிராஸிங் மேம்பாலம் (Business Bay Crossing Bridge) 30 மணி நேரங்களுக்கு தொடர்ந்து மூடப்படுவதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்திருக்கிறது.

புர் துபாயையும் தேராவையும் இணைக்கும் இந்த மேம்பாலம் இன்று காலை (டிசம்பர் 18 , வெள்ளிக்கிழமை) 12  (AM) மணிமுதல் நாளை (டிசம்பர் 19, சனிக்கிழமை) காலை 6 மணிவரையிலும் மூடப்படும் என நேற்று RTA நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனவோட்டிகள் கார்ஹூட் மேம்பாலம், அல் மக்தூம் மேம்பாலம் மற்றும் ராஸ் அல் கோர் சாலையைப் பயன்படுத்துமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.

Business Bay Crossing
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap